திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தினமும் ஏர் இந்தியா விமானம் சார்ஜா நாட்டிற்கு விமானங்களை இயக்கி வருகிறது இந்நிலையில் திருச்சியில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் விமானம் துபாய்க்கு சென்று மீண்டும் அங்கிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு மறுநாள் விடியற்காலை இரண்டு மணிக்கு வந்து சேரும் அதன்படி நேற்று காலை திருச்சியில் சர்வதேச விமான நிலையத்திலிருந்து துபாய் சத்யாவிற்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானம் இன்று விடியற்காலை இரண்டு மணி அளவில் வந்து சேர வேண்டும்.

ஆனால் விமானத்தில் ஏற்பட்ட இயந்திர தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருந்து விமான புறப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டதால் இருந்து திருச்சிக்கு வரக்கூடிய பயணிகள் 154 பேரும் திருச்சியில் இருந்து செல்லும் 101 பயணிகளும் அவதி அடைந்தனர் சுமார் 7 மணி நேரத்திற்கும் அதிகமாக பயணிகள் விமான நிலையத்தில் காத்துக் கிடந்ததால் பயணிகளுக்கும் ஏர் இந்தியா விமான ஊழியருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு தகராறு ஏற்பட்டது இதை எடுத்து விமான நிலைய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி மாத்தி விமான மூலம் திருச்சியிலிருந்து சாஜாவிற்கு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது அதனை தொடர்ந்து இன்று மாலை நாலு மணி அளவில் மாற்று விமானம் மூலம் பயணிகள் சார்ஜவிற்கு புறப்பட்டு செல்ல உள்ளதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *