திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நாளை காலை 09.45 மணியளவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குக் கடனுதவிகள், மணிமேகலை விருதுகள், மாநில அளவிலான வங்கியாளர் விருதுகள் வழங்கி, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

அதனைத் தொடர்ந்து திருச்சி அருகே உள்ள மணப்பாறை மண்டி பட்டி பகுதியில் நண்பகல் 12 மணி அளவில்தமிழ்நாடு செய்தித் தாள் மற்றும் காகித நிறுவனத்தின் (TNPL) 2-வது அலகினையும் மற்றும் மணப்பாறை சிப்காட் வளாகத்தினையும் திறந்து வைக்கிறார். மேலும் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் சன்னாசிப்பட்டியில் பிற்பகல் 02.45 மணியளவில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே ஒன்றாவது பயனாளிக்கு மருந்து பெட்டகம் வழங்கி, மருத்துவத் துறை கட்டடங்களை திறந்து வைத்து, அரசு மருத்துவமனைகளில் நிறுவப்பட்ட மருத்துவ கருவிகளின் சேவைகளை தொடங்கி வைக்கிறார். முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை அமைச்சர் கே என் நேரு திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், மேயர் அன்பழகன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்