திருச்சியில் கடைக்கு சென்ற 8 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கடத்தி சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் , வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டது .

இவ்வழக்கின் புலன் விசாரணையை முடித்து எதிரி ராஜேந்திரன் ( 36/22 ) த.பெ.முனிராஜ் என்பவர் மீது கடந்த 23.07.2020 – ந்தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது . மேற்படி வழக்கில் திருச்சி மகிளா நீதிமன்றத்தின் நீதிபதி ஸ்ரீவத்சன் விசாரணையை முடித்து 15.09.2022 – ம்தேதி , மேற்படி எதிரி ராஜேந்திரன் என்பவருக்கு ச / பி 9 ( m ) r / w 10 of POCSO Act- ன்படி 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் , ரூ .3,000 / – அபராதமும் , ச / பி 366 இதச – ன்படி 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் , ரூ .2,000 / – அபராதமும் விதித்து ஏககாலத்தில் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார் . இவ்வழக்கில் அரசு வழக்கறிஞர் அருள்செல்வி ஆஜரானார்கள் . இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து , குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்த கோட்டை மகளிர் காவல் ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் பாராட்டு தெரிவித்தார் . மேலும் இது போன்ற குற்ற சம்பவங்கள் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *