தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைமை செயற்குழு கூட்டம், கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா தலைமையில் இன்று திருச்சி என்.எம். கே. காலனி எஸ்.எஸ். மஹாலில் நடைபெற்றது.ம.ம.க.பொது செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது, த.மு.மு.க. பொது செயலாளர் பேராசிரியர் ஹாஜாகனி, மாநில பொருளாளர்கள் ஷபியுல்லாஹ் கான், கோவை உமர் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

தமிழகத்தில் 68 அமைப்பு மாவட்டங்களில் கிளை கழகம் முதல் மாவட்டம் நிர்வாகம் வரை கழக அமைப்பு தேர்தல் விதிமுறைகளை கடைபிடித்து ஜனநாயக முறைபடி தேர்தல்கள் நடைபெற்று புதிதாக பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட தலைமை நிர்வாகிகள் உள்ளிட்ட 430 தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இதில் கட்சியின் செயல் அறிக்கைகள், வரவு செலவு கணக்குகள், அமைப்பு விதிகளில் திருத்தம் மற்றும் புதிய விதிகளை சேர்ப்பது என தலைமை செயற்குழுவில் பல்வேறு பொருள்களில் விரிவாக விவாதங்கள் நடைபெற்றது. மேலும் தலைமை செயற்குழுவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும். தமிழகத்தில் இந்தியை திணிக்க கூடாது.மத்திய அரசின் பொது சிவில் சட்டத்தை தமிழக அரசு எதிர்க்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றுவது குறித்து விவாதம் நடைபெற்றது. இந்த தீர்மானங்கள் அனைத்தும் சமயபுரம் அருகே நாளை நடக்கும் தலைமை பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ளது.இ.ன்று நடந்த தலைமை செயற்குழு கூட்டத்தில் திருச்சி மேற்கு மாவட்ட தலைவரும், மாநகராட்சி கவுன்சிலருமான பைஸ் அகமது, திருச்சி கிழக்கு மாவட்ட தலைவர் முகமது ராஜா மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *