கூட்டுறவு சங்கங்களில் 5 ஏக்கர் வரை வைத்துள்ள விவசாயிகள் பெற்ற கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என த.வெ.க தேர்தல் வாக்குறியாக அறிவித்தது. ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வந்த பின் 50 ஆயிரம் வரை கடன் பெற்ற விவசாயிகளின் கடன்களை மட்டும் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பு விவசாயிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக இன்று ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதலமைச்சர் விஜய் விவசாயிகளை ஏமாற்றி விட்டார். விவசாயிகளை பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளிவிட்டார் என கூறி சாலையில் வந்தவர்களிடம் சென்று பிச்சை எடுத்தனர். தொடர்ந்து ஏற்கனவே தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தப்படி விவசாயிகளின் கடன்களை தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முழக்கஙகளை எழுப்பினர். பின்னர் கோரிக்கைகள் அடஙகிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழஙகினர்.
