ஈகைத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) திருச்சி மாவட்டத்தின் சார்பில் பிரம்மாண்ட சிறப்புத் தொழுகை இன்று நடைபெற்றது.

இந்தச் சிறப்புத் தொழுகையில் திருச்சியின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்த 5000-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஒரே இடத்தில் திரண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.

தொழுகையைத் தொடர்ந்து, தியாகத்தின் அவசியத்தையும், இறை நம்பிக்கையையும் வலியுறுத்தி மாநிலப் பேச்சாளர் அப்துர் ரஹ்மான் ‘குத்பா’ பெருநாள் பேருரையை ஆற்றினார். தொழுகை நிறைவடைந்ததும், இஸ்லாமியப் பெருமக்கள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி, மகிழ்ச்சியுடன் தங்களது பெருநாள் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
