கப்பலோட்டிய தமிழன் சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்க மாநிலத் தலைவர் டாக்டர் பி ஜே செந்தில் பிள்ளை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்க மாநில பொருளாளர் மாணிக்கம், திருச்சி மாநகர மாவட்ட அமைப்பாளர் திருநாவுக்கரசு, மாவட்ட அமைப்பாளர் டைமன் பாலு, மாநில இளைஞரணி தங்கம் குமார், வ உ சி கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
