மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் ஷாஜிராம் இவரது மகன் உதய்(36). இவர் திருச்சி பெரிய கடை வீதி அடுத்துள்ள பெரிய செட்டி தெருவில் தங்க நகை மதிப்பீடு செய்து கொடுக்கும் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் மகாராஷ்டிராவை சேர்ந்த நித்தின்(18) என்பவர் பணிபுரிந்து வந்தார். இன்று காலை அவருடைய கடைக்கு வந்த அடையாளம் தெரியாத 5மர்ம நபர்கள் கடையில் உரிமையாளரை பார்க்க வேண்டும் என்று நித்தினிடம் கூறியுள்ளனர். அவர் மாடியில் இருக்கிறார் என்று கூறவே அவர்கள் 5பேரும் மேலே சென்று உதயின் கை கால்களை கட்டி கழிவறையில் அடைத்து வைத்து விட்டு வீட்டில் இருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

நீண்ட நேரத்திற்கு பின் உதய் கழிவறை கதவை உடைத்துக் கொண்டு வெளியே வந்து திருச்சி கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய ஐந்து கொள்ளையர்களை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப் பகலில் அதிக ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் கொள்ளை போனதை அடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *