திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள திருச்சி மாநகர ரைபில் கிளப் கடந்த 31.12.2021 – ந்தேதி தொடங்கப்பட்டது . மாவட்ட , தேசிய மற்றும் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டிக்கு கலந்து கொள்ள பயிற்சி பெறும் வகையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது . மேலும் திருச்சி மாநகர ரைபில் கிளப்பில் மொத்தம் 215 நிரந்தர உறுப்பினர்கள் மற்றும் மாணவர்களும் உள்ளனர் . மேற்படி ரைபிள் கிளப்பில் 50 மீட்டர் தூரத்தில் ஒரு சுடு தளமும் , 25 மீட்டர் தூரத்தில் ஒரு சுடுதளமும் , 10 மீட்டர் தூரத்தில் மூன்று சுடுதளம் மற்றும் உடற்பயிற்சி கூடம் ஒன்று உள்ளது . இக்கிளப்பில் வருகின்ற 24.07.2022 முதல் 31.07.2022 வரை தமிழ்நாடு மாநில அளவிலான 47 வது துப்பாக்கி சுடும் போட்டிகள் -2022 ( Rifle and Pistol Events ) திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள மாநகர ரைபில் கிளப்பில் நடைபெற உள்ளது . இப்போட்டியில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 1500 வீரர்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் பங்கேற்க உள்ளனர் . இந்த போட்டி தொடர்பான அறிவிப்பை திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் வெளியிட்டார் . அப்போது திருச்சி ரைபிள் கிளப் செயலாளர் செந்தூர்செல்வன் மற்றும் பொருளாளர் சிராஜீதின் ஆகியோர் உடனிருந்தனர் . அத்துடன் துப்பாக்கி சுடும் போட்டிகள் மற்றும் அதற்கான தகுதிகள் பயிற்சிகள் மற்றும் மாநில , தேசிய சர்வதேச அளவிலான பல்வேறு போட்டிகள் குறித்த கையேடு ஒன்றும் போட்டிகள் நடைபெறும் சமயத்தில் வெளியிடப்படுவதாக அறிவித்தார். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு 90920 27373 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்தார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *