தனியார் நிதி எல்ஃபின் (ELFIN) நிறுவனத்தில் பொதுமக்களின் பல கோடி பணத்தை மோசடி செய்தது தொடர்பான புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு போலீசார் திருச்சியில் மாவட்டத்தில் உள்ள எல்ஃபின் தனியார் நிதி நிறுவனத்துடன் தொடர்புடைய 18-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் எல்ஃபின் தனியார் நிதி நிறுவனத்தின் முகப்பு இரும்பு கேட்டின் பூட்டை கடப்பாரையால் உடைத்து உள்ளே சென்று பொருளாதார குற்ற தடுப்புப்பிரிவினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் சேலம் மாவட்டம் பொருளாதார குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணபிரியா மற்றும் அதிகாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னனி மாநில துணை செயலாளராகவும், திருச்சி மாநகராட்சி 17வது வார்டு மாமன்ற உறுப்பினருமான பிரபாகரன் இல்லத்தில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது சோதனை மேற்கொள்ளப்பட்டவரும் பிரபாகரன் ஏற்கனவே எல்பின் நிறுவனத்தில் ஏஜெண்டாகவும் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல வடக்கு தாராநல்லூர் காமராஜ் நகரில் உள்ள அவரது உறவினர் மாமியார் வீட்டில் கடலூர் துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை தலைமையிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது மாமன்ற உறுப்பினர் பிரபாகரன் வீட்டில் இல்லை.

திருச்சி மாவட்டத்தில் மட்டும் சுமார் 18க்கும் மேற்பட்ட இடங்களில் பொருளாதார குற்ற தடுப்புப்பிரிவினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் 50 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் நிறுவன இயக்குனர் ராஜா மற்றும் அவரது சகோதரர் ரமேஷ்குமார் ஆகியோர் தலைமறைவாக உள்ளதாக குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *