திருச்சியில் கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது. இந்நிலையில் சோமரசம்பேட்டை பகுதி சாலையில் உள்ள சுமார் 60-ஆண்டு கால பழமையான மரத்தின் மீது பலத்த காற்று வீசியதின் காரணமாக மரம் முறிந்து விழுந்தது. இதில் மரத்தின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் நசுங்கியது.
மேலும் அப்ப பகுதியில் பேருந்து போக்குவரத்து நிறைந்த மக்கள் அதிகம் செல்லக்கூடிய பகுதியில் மின் கம்பம் காற்றின் வேகத்தால் எதிர்ப்பாரவிதமாக திடீரென சாய்ந்ததால் பரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து மின்வாரியத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் கொடுத்ததையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக மின் இணைப்பை துண்டித்தனர். தொடர்ந்து மின்கம்பங்கள் சீர்படுத்தும் பணிகளையும் ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதே போல் வீடுகளுக்கு செல்லும் கேபிள் நெட்வொர்க் ஒயர்கள் அருந்து விழுந்ததை தொடர்ந்து கேபிள் நெட்வொர்க் நிறுவனத்தார் சம்பவ இடத்திற்கு சென்று கேபிள் நெட்வொர்க் கேபிள்களை சீர்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.