தமிழகத்தில் அரையாண்டு தேர்வு முடிந்து கடந்த டிசம்பர் 24ம் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டது. கொரோனோ பரவல் அதிகரிப்பால் அரையாண்டு விடுமுறை முடிந்தும் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது
இந்நிலையில் 40 நாட்களுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டது. அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளான 540 பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.
இதில் 224 அரசு பள்ளிகளில் 3,675 ஆசிரியர்களும், 206 தனியார் பள்ளிகளில் 4,473 ஆசிரியர்களும், 110 உதவி பெறும் பள்ளிகளில் 2,312 ஆசிரியர்களும், என்று மொத்தம் 10 ஆயிரத்து 460 ஆசிரியர்களும் , 1,773 ஆசிரியரல்லாத பணியாளர்களும், பணியாற்றுகின்றனர்.
கொரோனோ பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் செயல்படுகிறது. மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து வர வேண்டும்.
மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என்பதை வெப்ப மானி கொண்டு பரிசோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்க வேண்டும்
காய்ச்சல் இருந்தால் உடனடியாக கொரோனோ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அடிக்கடி கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் மதிய உணவுகளை பரிமாறிக்கொள்ள கூடாது.
அனைத்து ஆசிரியர்கள் மற்றும் , 15 வயது முதல் 18 வயத்துக்குட்பட்ட மாணவர்கள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் செயல்பட்டு வருகிறது..