மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவு பெற்ற திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் முனைவர் இனிகோ இருதயராஜ் அவர்கள் திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பொது மக்களிடம் உதயசூரியன் சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்த வாக்கு சேகரிப்பின் போது கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் தேமுதிக விடுதலை சிறுத்தைகள் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
