திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் மாநகராட்சி தலைமை அலுவலகம் முன்பு பள்ளி, மாணவ, மாணவிகள், மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்ட மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி பேரணி இன்று நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை திருச்சி மாநகராட்சி ஆணையர் பொன்மணி தொடங்கி வைத்தார்.

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வருங்காலத்தில் நிரந்தரமாக குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் மழைநீரை சேமித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக அனைத்து அரசு மற்றும் தனியார் கட்டிடங்களிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்கள். இப்பணியை அரசு கட்டிடங்கள் மட்டுமல்லாமல் அனைத்து தனியார் கட்டிடங்களிலும் ஏற்படுத்த வேண்டுமென்றும், இதனால் ஏற்படும் நன்மைகளை பொதுமக்கள் அறியும் வண்ணம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியதன் பேரில் இன்று விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியானது மேற்கு வட்டாட்சியர் அலுவலகம் முதல் அமெரிக்கன் மருத்துவமனை வரை நடைபெற்றது. இதில் 700க்கும் மேற்பட்ட வர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் துணை மேயர் திவ்யா தனக்கோடி, நகர பொறியாளர் அண்ணாதுரை, மண்டல தலைவர்ககள் துர்கா தேவி, ஜெயா நிர்மலா , மாமன்ற உறுப்பினர் கலைச்செல்வி, செயற்பொறியாளர்கள், உதவி ஆணையர்கள் , உதவி செய்ய பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.
