திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வெற்றி வேட்பாளர் கருப்பையா போட்டியிடுகின்றார்.இவர், புதுக்கோட்டை, திருச்சி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதேபோன்று பல்வேறு பகுதிகளில் திருச்சி மாவட்ட அதிமுகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி மாவட்ட செயலாளர் இப்ராம்ஷா ஏற்பாட்டில்,திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வெற்றி வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து, நடிகர் ரவி மரியா மற்றும் நடிகர் கஞ்சா கருப்பு ஆகியோர் திருச்சி சிந்தாமணி பகுதியில் வாக்கு சேகரித்தனர்..இதில் திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் சீனிவாசன் மற்றும் அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *