கடந்த 23.07.22-ந்தேதி காலை திருச்சி மாநகர காவல்துறை நுண்ணறிவு பிரிவு அலுவலக வாட்ஸ்அப் அலைபேசி எண்ணிற்கு 73394 99271 என்ற எண்ணிலிருந்து, ‘நான் மனித வெடிகுண்டு, இன்னைக்கு திருச்சி இரயில்வே ஸ்டேஷன்ல வெடிகுண்டு வைக்க போறேண்டா முடிஞ்சா காப்பாத்து என்ற வாசகங்கள் அடங்கிய குறுந்தகவல் ஒன்றும், அதனுடன் ஆபாச வீடியோ ஒன்றும் வந்தததை தொடர்ந்து, பணியில் இருந்து முதல்நிலை காவலர், உயரதிகாரியின் கவனத்திற்கு கொண்டு சென்று, கே.கே.நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், வழக்கு செய்யப்பட்டு, திருச்சி மாநகர காவல் ஆணையர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மாநகர சைபர் கிரைம் காவல்துறை உதவியுடன், அந்த நபரின் அலைபேசி எண்ணின் விபரங்களை சேகரித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த புதுக்கோட்டை மாவட்டம், குழிபிறையை தாலுகாவை சேர்ந்த கதிரேசன் மகன் செல்வராஜ் (49). என்பவரை கே.கே.நகர் காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்டு விசாரணையில் செல்வராஜ் தற்போது திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் புரோட்டா மாஸ்ட்டாக பணியாற்றி வருகிறார். இவருக்கும் இவரது உறவினருக்கும் இடம் தகராறு தொடர்பாக பிரச்சனை இருந்து வந்தது நிலையில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். காவல்துறையினர் புகார் கொடுத்தும் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது இதனால் ஆத்திரம் அடைந்த செல்வராஜ் திருச்சி காவல்துறை எண்ணிற்கு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறி மிரட்டல் விடுத்து வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பி உள்ளார் என தெரிய வந்தது. மேலும், விசாரணையில் குடிபோதையில் இப்படி செய்ததாக கூறப்படுகிறது.இதனை தொடர்ந்து கே.கே.நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி செல்வராஜை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்