மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளரான அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு, திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட அரியமங்கலம் நேருஜி நகர் பகுதியில் பரப்புரை வாகனத்தில் நின்றபடி கமல்ஹாசன் பேசினார். திருச்சியின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். திருச்சியை முன்னேற்றுவதற்கான ஒரே பாதை கல்வி. அந்த மகத்தான பாதையில் அன்பில் மகேஸ் சிறப்பாக பயணித்துவருகிறார். அதனால், தமிழகத்தில் பெண் கல்வி விகிதம் 34 விழுக்காடு அதிகரித்துள்ளது. இது போன்ற ஆக்கபூர்வமான பணிகளை தொடர்ந்து கிடைக்கச்செய்ய, மக்கள் அன்பில் மகேஸ்க்கு வாக்களிக்க வேண்டும்.

திருச்சியை மேலும் முன்னோக்கி எடுத்துச் செல்ல அன்பில் மகேஷ் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். திருச்சியை முன்னெடுத்துச் செல்வதற்கான பாதை கல்வி. அத்தகைய கல்வியை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கும் மகத்தான பணியை மகேஷ் செய்து வருகிறார். அதனால், தமிழகம் பெண் கல்வியில் 34 விழுக்காடு அதிகரித்துள்ளது. “நான் முதல்வன்” திட்டத்தைக் கொண்டு வந்தவர் முதல்வர் மு.க. ஸ்டாலின். இத்தொகுதியில் ஒலிம்பிக் அகாடமி கொண்டுவந்தவர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். நான் கனவு கண்ட கல்வித் திட்டங்களை அமைச்சர் அன்பில் மகேஸ் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார். அவர் மீண்டும் வெற்றி பெற வேண்டும். தமிழ்நாட்டின் வளர்ச்சியைக் கண்டு டெல்லியில் உள்ளவர்களுக்கு “வயிற்று எரிச்சல்” ஏற்படுகிறது.

கல்வி, சமூக நீதி மற்றும் பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முன்னணியில் இருப்பதை கண்டு, டெல்லி ஆட்சியாளர்கள் (மத்திய அரசு) பொறுத்துக் கொள்ள முடியாமல் இருக்கின்றனர். தமிழகத்திற்கான கல்வி நிதியை நிறுத்தி வைத்துக்கொண்டு, இந்தியைத் திணிக்க முயலும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் செயலை ஒரு வியாபாரி கூட செய்யமாட்டார். தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கவேண்டும். “நாளை நமதே” என்ற முழக்கத்துடன் கமல்ஹாசன் தனது உரையை முடித்துக்கொண்டார். இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மு. மதிவாணன், பகுதிச் செயலாளர் விஜயகுமார், மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள், திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *