மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிரவன் தொகுதி முழுவதும் உதயசூரியன் சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றியம் மற்றும் ச.கண்ணனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாலாஜி நகர் சீதாலட்சுமி நகர், அருந்ததியர் தெரு வடக்கிப்பட்டி ரைஸ் மில் பூணம் பாளையம் மாரியம்மன் கோவில் ஈச்சம்பட்டி இந்திரா காலனி வடக்கு தெற்கு கடைவீதி சந்தை வெள்ளாளர் தெரு நரசிங்கமங்கலம் நெசவாளர் காலனி அண்ணா நகர் புது தெரு அம்பலக்காரர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.

இந்த வாக்கு சேகரிப்பின் போது மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளான திமுக, காங்கிரஸ், தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மக்கள் நீதி மையம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிரவனுக்கு உதயசூரியன் சின்னத்தில் பொது மக்களிடம் வாக்குகள் சேகரித்தனர்.
