தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த இல.கணேசன் வயது (76) இவர் தமிழக பாஜக தலைவராகவும், மாநிலங்களவை முன்னாள் எம்.பி.யாகவும் இருந்தவர். தற்போது பாஜகவில் தேசிய குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.

 

இந்நிலையில் ,மணிப்பூர் மாநில ஆளுநராக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் அவர்களை நியமனம் செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த வாரத்தில் அறிவித்தார். சிக்கிம் மாநில ஆளுநர் கங்காதர் பிரசாத் மணிப்பூர் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த நிலையில், இல.கணேசன் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார்.

 

இதனைத் தொடர்ந்து பாஜக தேசிய குழு உறுப்பினர் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளை இல.கணேசன் ராஜினாமா செய்து தனது ராஜினாமா கடிதத்தை மாநில பாஜக தலைவர் அண்ணாமலையிடம் வழங்கினார்.

 

இந்நிலையில், மணிப்பூர் மாநில ஆளுநராக இல.கணேசன் தற்போது அதிகார்பபூர்வமாக பதவி ஏற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *