திருச்சி வாவ் உமன்ஸ்  என்டர்டைமென்ட் சார்பாக பசுமை விழிப்புணர்வு குறித்த மெஹந்தி வேர்ல்ட் ரெக்கார்ட் மற்றும் கிட்ஸ் ராம் வாக் மற்றும் பிசினஸ் எக்ஸலென்ஸ் அவார்ட் ஆகிய முப்பெரும் நிகழ்ச்சி திருச்சி புதுக்கோட்டை சாலையில் உள்ள மொராய்ஸ் சிட்டி கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வாவ் உமன்ஸ்  என்டர்டைமென்ட் இயக்குனர் அஸ்மா சையத் மற்றும் அபிநயா ஆகியோர் தலைமை தாங்கினார்.

 சிறப்பு அழைப்பாளராக புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் இன்டர்நேஷனல்  யுகே நிறுவனத்தலைவர் செந்தூர் பாண்டியன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். முன்னதாக 75 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டும், முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் கனவை நினைவாக்கும் விதமாக இந்த வருடம் முழுவதும் பசுமையை மையப்படுத்தி திருச்சியில் இன்று 150 க்கும் மேற்பட்ட மெகந்தி ஆர்டிஸ்டுகளை கொண்டு பசுமை குறித்த விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு செல்லும் வகையிலும் பெண்களின் முன்னேற்றத்தை ஊக்குவிதமாக முழுக்க முழுக்க பெண்களைக் கொண்டு 75 நிமிடம் 75 நொடிகள் வரை தொடர்ந்து பசுமை மெஹந்தியை வரைந்து உலக சாதனை படைத்துள்ளனர்.

இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து ஏராளமான மெஹந்தி ஆர்ட்டிஸ்டுகள் வந்து மெஹந்தி வரைந்து உலக சாதனை படைத்தனர் இதில் ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சையத் செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *