திருச்சியில் நான்கு சக்கர வாகனங்கள் இரண்டும் மோதிக்கொண்ட விபத்தில் படுகாயம் அடைந்த 40 வயது மதிக்க பெண் ஒருவர் ப்ரண்ட்லைன் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அவருக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்ததில் தலையில் பலத்த காயமும், நெஞ்சு பகுதியில் இரண்டு புறமும் விலா எலும்புகள் முறிந்தும், வயிற்றில் கல்லீரல் பலமாக அடிபட்டும், இரத்த கசிவும் இருந்தது உடனடியாக அவருக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை செய்தால் தான் காப்பாற்ற முடியும் என்ற நிலை இருந்தது, இந்த நிலையில் பொது அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். ராதாகிருஷ்ணன் ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர் ஆனந்த், தீவிர சிகிச்சை பிரிவு நிபுணர் வசந்த் மற்றும் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் தண்டபாணி, எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர் ராஜேஷ் குமார், முகம் மற்றும் பல் சிறப்பு சிகிச்சை நிபுணர் சுப்பிரமணி, தீவிர சிகிச்சை பிரிவு நிபுணர், நுரையீரல் சிறப்பு சிகிச்சை நிபுணர் மதன்மோகன், நிபுணர் கார்த்திகேயன், சிறுநீரக சிகிச்சை நிபுணர் கணேஷ் அரவிந்த் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் திறமையாக அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

படுகாயம் அடைந்த பெண்ணுக்கு ரத்தக் கசிவு மிகவும் அதிகமாக இருந்தாலும் வலது கல்லீரல் சிதைந்து இருந்தாலும் பேக்கிங் சிஸ்டம் மூலம் ரத்த கசிவு நிறுத்தப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பிறகு அவருக்கு நுரையீரல் பாதிப்பும், ரத்த தட்டு அணுக்கள் குறைவாக இருந்ததால் தேவையான செயற்கை சுவாசமும் ரத்த அணுக்களும் செலுத்தப்பட்டது. மூன்று நாட்கள் மருத்துவ குழுவினர் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டனர். மூன்று நாட்கள் முடிந்ததும் மறு அறுவை சிகிச்சை செய்து பேக்கிங் சிஸ்டம் எடுக்கப்பட்டது. மேலும் முழுமையாக ரத்தக்கசிவு நிறுத்தப்பட்டது கல்லீரல் நல்ல நிலையில் இருந்ததால் ரிசர்வேஷன் சர்ஜரி செய்யப்பட்டது. இந்த தீவிர சிகிச்சையின் போது அந்த பெண்ணுக்கு 30 யூனிட் ரத்தம் தேவைப்பட்டது.

இதற்கு அவரின் உறவினர்கள் நண்பர்கள் தேவையான நேரத்தில் இரத்த தானம் வழங்கினர். ப்ரண்ட் லைன் மருத்துவ குழுவினரின் திறமையான மருத்துவ சிகிச்சையால் அந்த பெண் காப்பாற்றப்பட்டு முழு குணம் அடைந்தார். மருத்துவ குழுவினருக்கு அந்த பெண்ணுக்கும் அவரின் உறவினர்களும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். தற்போது அந்தப் பெண் முற்றிலும் குணமாகி வீட்டிற்கு சென்று விட்டார். இதுபோல சாலை விபத்தில் படுகாயம் அடைவோர் ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் அங்குள்ள திறமையான அனுபவமிக்க மருத்துவ குழுவினரால் உடனடியாக கவனித்து மருத்துவமனையில் ஸ்டாண்டர்ட் புரோட்டோ கால் முறையில் சிகிச்சை அளிப்பார் இதனால் நோயாளிகள் மிகுந்த பயன்பெறுவர் தீவிர சிகிச்சை மற்றும் அவசர சிகிச்சை பிரிவு 24 மணி நேரமும் முழுமையாக செயல்படுவதால் எண்ணற்ற நோயாளிகள் ஆபத்தான நிலையில் இருந்து மீண்டும் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *