பத்தாம் வகுப்பு பொது தேர்வு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது அதன்படி கடந்த மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய பள்ளி  மாணவர்கள் எண்ணிக்கை 16648 அதில் தேர்ச்சி பெற்றவர்கள் 15500 தேர்ச்சி சதவீதம் 93.10, இதேபோல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய பள்ளி மாணவிகளின் எண்ணிக்கை 16528 அதில் தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை16094 தேர்ச்சி சதவீதம் 97 % சதவீதமாகும் இதில் தேர்வு எழுதிய மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 33176 அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மொத்தம் 31594, தேர்ச்சி 95. 23 % சதவீதமாகும்.

அதிலும் திருச்சி மாவட்டத்தில் செயல்படும் 195 பள்ளிகளில் 55 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. திருச்சி மாவட்டத்தில் அரசு பள்ளிகள், ஆதிதிராவிட நல பள்ளிகள், பழங்குடியினர் நலப் பள்ளிகள் என 446 பள்ளிகளில் 160 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டை விட இவ்வாண்டு 0.95 % தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. கடந்தது கடந்த ஆண்டு 8ம் இடத்தை பிடித்த திருச்சி மாவட்டம் தற்போது 5 ம் இடத்திற்கு முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *