திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செண்பகனூர் அய்யர்கிணறு பகுதியில் வசிப்பவர் தேவதாஸ்(42) ,இவருக்கு மாலை கண் நோய் உள்ளதாக கூறப்படுகிறது. இவர் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்துவரும் நிலையில் 15 வயது மகளும் இவருடன் சேர்ந்து வசித்து வருகிறார்.

இந்நிலையில் இவருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. தினந்தோறும் இவரது உறவினர் கண்ணன்(40) மற்றும் இவரது கூட்டாளிகளான ராஜ்குமார்(31),மணிகண்டன்(22) உள்ளிட்ட மூவரும் மதுபாட்டில்கள் வாங்கி வந்து தேவதாஸின் வீட்டில் வைத்து மதுகுடிப்பதையே வழக்கமாக வைத்துள்ளனர் .

இந்நிலையில் கொடைக்கானல் செண்பகனூர் அய்யர்கிணறு பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் குடித்து விட்டு உளறிவருவதாக அப்பகுதி மக்கள் சைல்டு லைனுக்கு புகார் அளித்தனர். சைல்டு லைன் அமைப்பினர் கொடைக்கானல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில், மகளிர் காவல் துறையினர் தேவதாஸ் என்பவரின் வீட்டில் சென்று பார்த்த போது தேவதாஸ் அளவுக்கு அதிகமாக குடித்து சுயநினைவை இழந்துள்ள நிலையில் இருந்ததாகவும் சிறுமி மது மயக்கத்தில் இருந்துள்ளார்.இதனை பார்த்த காவல் துறையினர் சிறுமியை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் கண்ணன்(சிறுமியின் மாமா) அடிக்கடி குச்சியால் அடித்து பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் மேலும் ராஜ்குமார், மணிகண்டன் ஆகிய இருவரும் சிறுமியை மது குடிக்க வைத்து தினந்தோறும் தனி தனியாக பாலியல் தொந்தரவு அளித்ததாக சிறுமி கூறியது விசாரணையில் தெரியவந்தது, இதனையடுத்து கோக்சோ சட்டத்தின் கீழ் அவர்கள் மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தை தினமும் மது கிடைப்பதற்காக தெரிந்தே இதற்கு சம்மதித்தார் என்பதும் தெரியவந்துள்ளது. சிறுமிக்கு இருந்த மது போதை பழக்கத்தை பயன்படுத்தி தொடர்ந்து சிறுமியை நாசம் செய்து வந்தது தெரியவந்துள்ளது. சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்து, அவரை உளவியல் ரீதியாக தயார் படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அத்துடன், வேறு யாராவது சிறுமியிடம் அத்துமீறினார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்த உள்ளனர். கூட்டு பாலியல் வன்கொடுமையில் சிறுமியை சீரழித்த மூவரின் செயல் கொடைக்கானலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *