எல்சிஏ எண்டர்டெயின்மென்ட் சார்பில் புகழ்பெற்ற திரைப்பட பின்னணி பாடகர் சித் ஸ்ரீராம் அவர்களின் இசை நிகழ்ச்சி வருகிற நவம்பர் மாதம் 18ஆம் தேதி திருச்சி மொராய் சிட்டி வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்த இசை நிகழ்ச்சி குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு திருச்சி பிளாசம் ஹோட்டலில் இன்று காலை நடைபெற்றது. இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் எல்சிஏ எண்டர்டெயின்மென்ட் உரிமையாளர் முகமது ரஃபீக், ஆப்பிள் மில்லட் உரிமையாளர் வீரசக்தி அஸ்வின் நிறுவனத்தின் உரிமையாளர் அஸ்வின், ரோட்டரி 30000 ஆளுநர் ஜெரால்டு, மொராய்ஸ் சிட்டி மேலாளர் பிரபு ஆகியோர் கலந்துகொண்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
இசை நிகழ்ச்சியின் டிக்கெட்டை அறிமுகம் செய்து வைத்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:- திருச்சி ஹோலி கிராஸ் பெண்கள் கல்லூரியின் நூற்றாண்டு விழாவையொட்டி நலிவடைந்த கிராமத்தை தத்தெடுத்து அதனை ஸ்மார்ட் கிராமமாக மாற்றுவதற்கான நிதி திரட்டும் இசை நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற உள்ளது. இந்த இசை நிகழ்ச்சியில் புகழ்பெற்ற திரைப்பட பின்னணி பாடகர் சித் ஸ்ரீராம் கலந்துகொண்டு பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்பட பாடல்களைப் பாடி திருச்சி மக்களை மகிழ்விக்க உள்ளார். இந்த இசை நிகழ்ச்சி வருகிற நவம்பர் மாதம் 18ஆம் தேதி திருச்சி மொராய் சிட்டி வளாகத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த இசை நிகழ்ச்சியை பார்ப்பதற்காக வரும் ரசிகர்களுக்கு 500 ரூபாய் ஆயிரம் முதல் 1000 ரூபாய் வரை டிக்கெட் விற்பனையாகி வருகிறது.
மேலும் வரும் பொது மக்களின் வாகனங்கள் நிறுத்துவதற்காக பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது இந்த இசை நிகழ்ச்சியை பார்க்க 15,000 மேற்பட்ட ரசிகர்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தனர். இந்த இசை நிகழ்ச்சிக்கு எல்சிஏ எண்டர்டெயின்மென்ட், அஸ்வின் ஸ்வீட்ஸ், ஆப்பிள் மில்லட், சரவணா எலெக்ட்ரிக்கல்ஸ் மற்றும் மீடியா பார்ட்னர் N tv ஆகியோர் வழங்குகின்றனர்.