Month: April 2022

உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணங்கள் நிறுத்தி வைப்பு – துணை வேந்தர் அறிவிப்பு.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம் இன்று நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:- திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் அதன் கீழ் செயல்படும் அனைத்து உறுப்பு கல்லூரிகளுக்கும் தேர்வு கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை மாற்றியமைத்தது. இந்த நிலையில் மாணவர்கள் அந்த கட்டணம் உயர்த்தப்பட்டதிற்கு எதிர்ப்பு…

திருச்சியில் நடந்த சமூகநீதி பாதுகாப்பு கழகத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் சமூகநீதி பாதுகாப்பு கழகத்தின் மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் முத்துராஜா தலைமையில் இன்று நடைபெற்றது. மாநில பொருளாளர் கோவிந்தராஜ், மாநில செய்தி தொடர்பாளர் ரவி ரத்தினம்,…

குருத்தோலை ஞாயிறு – பவனி சென்ற கிறிஸ்த மக்கள்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு யூதர்களின் ராஜாவாகிய இயேசு பவனியாக செல்லும்போது ஜெருசலேம் மக்கள் அவரை தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா, என வழி நெடுக வரவேற்றனர். அப்போது குருத்தோலைகளை மக்கள் பிடித்து இயேசுவை வரவேற்றதாக வேதாகமம் வெளிப்படுத்துகிறது. இந்த நிகழ்வை…

திருச்சியில் வேன் கவிழ்ந்து 30 பேர் படுகாயம் – 4 பெண்கள் கவலைக்கிடம்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அழுந்தலைப்பூர் கிராமத்தில் வேன் கவிழ்ந்ததில் வேனில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் காயமடைந்த அனைவரும் லால்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி…

திருச்சியில் பெண் உதவி ஆய்வாளர் தற்கொலை.

திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் இக்பால் காலனி பகுதியை சேர்ந்த உதவி ஆய்வாளர் ஆதிலட்சுமி இவர் நவல்பட்டு காவலர் பயிற்சி பள்ளியில் பணியாற்றி வருகிறார்‌. இவரது கணவர் நடராஜன் இவர் சிறப்பு உதவி ஆய்வாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இந்த தம்பதியினருக்கு இரண்டு…

தமிழகத்தில் உள்ள 29 மாவட்டத்தில் கொரோனோ பூஜ்யம் என்கிற நிலையில் உள்ளது – தமிழக மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் பேட்டி..

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் திடீர் ஆய்வு செய்தார். பின்னா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்… திருச்சியில் 55 வயதில் மூளைச்சாவு அடைந்து நபரின் உடல் உறுப்புகளை தானமாக பெற்று உடல் உறுப்பு…

பெருநகர வளர்ச்சி குழுமத்தில் திருச்சி மாவட்டம் கண்டிப்பாக இடம்பெறும் – அமைச்சர் கே.என் நேரு பேட்டி

திருச்சி மதுரை நெடுஞ்சாலையில் பஞ்சப்பூரில் 350 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக அமைய உள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ள இடத்தை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார் – இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட…

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் .

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும் ஆட்டோ, மோட்டார் வாகனங்களுக்குFC மற்றும் லைசன்ஸ் கட்டணங்களை பன்மடங்கு உயர்த்தி யதை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி ஏஐடியுசி ஆட்டோ தொழிற்சங்கம் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை யொட்டி திருச்சி மாநகர்…

ஹெல்மெட் இல்லைன்னா? 3-மாதம் லைசென்ஸ் கட்!!!

மும்பையில் ஹெல்மெட் இல்லாமல் இரு-சக்கர வாகனம் ஓட்டினால், 3 மாதம் லைசன்ஸ் இடைநீக்கம் செய்யப்படும் என மும்பை போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறையால் போக்குவரத்து விதிமுறை மீறல்களைக் குறைக்க உதவும். ஹெல்மெட் பயன்படுத்துவது அதிகரிக்கும் என மும்பை…

சொத்து வரி உயர்வை கண்டித்து மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் மாநகராட்சி முன்பு பாஜகவினர் ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாநகர் மாவட்ட பாஜக சார்பில் சொத்து வரி உயர்வை கண்டித்து மாநகராட்சி அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் எம்.என்.ராஜா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர்…

திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் சந்தனக்கூடு விழா – புதிய நிர்வாகிகள் பேட்டி

திருச்சியில் புகழ் பெற்ற நத்தர்ஷா பள்ளிவாசலில் வருடந்தோறும் சந்தனக்கூடு விழா பிரம்மாண்டமாக நடைபெறுவது வழக்கம். இதுதொடர்பாக இன்று பள்ளிவாசல் அலுவலகத்தில் வக்பு வாரியத்தால் புதிய நிர்வாகியாக பதவியேற்ற சையத்சலாவுதீன், முகமதுகெவுஸ், நூர்தீன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய சையத்சலாவுதீன்பு:-புதிதாக…

திருச்சியில் நடந்த விபத்து – ஒருவர் பலி 4 பேர் காயம்.

திருச்சி கேகே நகர் காவல் நிலையம் பகுதிக்கு உட்பட்ட ரிங்ரோடு பாரி நகர் பகுதி சாலையில் இன்று மாலை வேகமாக வந்த ஆட்டோ ஒன்று திடீரென சாலை ஓரத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தை கண்ட அப்பகுதியை சேர்ந்த…

திருச்சியில் திடீர் கனமழை மக்கள் மகிழ்ச்சி.

தமிழகம் மற்றும் இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக இன்று மற்றும் நாளை தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், வட தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு…

75-வது சுதந்திர தினம் “அம்ரித் மகோத்சவ்” நினைவு பரிசு – மேஜர் சரவணன் குடும்பத் தினரிடம் வழங்கப்பட்டது.

இந்திய நாட்டின் 75வது சுதந்திர தினம் அம்ரித் மகோத்சவ் பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 75 இடங்களில் 75 வாரங்களுக்கு கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக நமது நாட்டின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பிற்காக நடைபெற்ற போர்களில் இன்னுயிர் நீத்த…

நகராட்சி கவுன்சில் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்த துணைத் தலைவரால் பரபரப்பு.

திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சி அலுவலகத்தில் இன்று நடைப்பெற்ற கவுன்சில் கூட்டத்தை துணைத்தலைவர் புறக்கணித்து வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி லால்குடி தேர்வு நிலை பேரூராட்சியாக இருந்து திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. மேலும் நடந்து முடிந்த…