Month: July 2022

திமுக 15-வது பொதுத் தேர்தல் – விருப்ப வேட்பு மனு படிவம் பெற்ற 56-வது வட்ட செயலாளர் PRB பாலசுப்பிர மணியன்.

திமுகவின் 15-வது பொது தேர்தல் நடைபெறுவதையொட்டி திருச்சி மத்திய மாவட்டம் சார்பில் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட திருவரங்கம், திருவானைக்கோவில், உறையூர், தில்லை நகர், பொன் நகர், காஜாமலை ஆகிய பகுதிகளில் உள்ள கழக நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடுவர்களுக்கான விண்ணப்ப படிவம் திருச்சி தில்லை…

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 21-ம் ஆண்டு நினைவு தினம் திருச்சி மாவட்ட சிவாஜி தலைமை மன்ற அகில இந்திய சிவாஜி மன்றத்தின் சார்பில் முதியோருக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

பராசக்தி’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி தமிழ் சினிமாவையே தனது உணர்வுப்பூர்வமான நடிப்பால் ஆட்டிப்படைத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கடந்த 2001-ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் தேதி இதே நாளில்தான் மறைந்தார். இன்று அவரது 21- வது ஆண்டு…

தமிழகத்தில் பாலியல் புகாரில் சிக்கும் தனியார் பள்ளிகளை அரசுடைமை ஆக்க வேண்டும் – வேல்முருகன் எம்.எல்.ஏ பேட்டி

திருச்சியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய 100-க்கும் மேற்பட்டவர்கள் தமிழக வாழ்வுரிமை கட்சியில் தங்களை உறுப்பினர்கள் இணைத்துக் கொள்ளும் இணைப்பு விழா இன்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு திருச்சி மாநகர மாவட்ட…

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் NIA – அதிகாரிகள் திடீர் விசாரணை

திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. இம்முகாமில் இந்தோனேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த குற்றச்செயல்களில் ஈடுபட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதை போல் பல்வேறு வழக்குகளை தொடர்புடைய ஈழத் தமிழர்கள் சுமார் 108 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.…

தலையில் அம்மிக் கல்லை போட்டு சிறுவன் கொலை – கொடூர தந்தை கைது.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் வயது 38. இவரது மனைவி சுமதி வயது 32.கணவன், மனைவி இருவரும் அருகே உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தனர். இவர்களது மூத்த மகன் அர்ஜுனன் வயது 14…

திருச்சியில் முதியவரை கடத்தி 5-லட்சம் பறிக்க முயன்ற கும்பல் – 3-பேர் கைது, 2-பேர் தப்பி ஓட்டம்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் நத்தக்கரை பகுதியை சேர்ந்தவர் விவசாயி ஆதிமூலம் வயது 62. இவர் அவ்வப்போது நண்பர்களுடன் சேர்ந்து திருச்சி, சென்னை மற்றும் கோயமுத்தூர் போன்ற ஊர்களுக்கு சென்று பணம் வைத்து சூதாடும் பழக்கம் உள்ளது. இந்நிலையில் கடந்த 5 வருடங்களுக்கு…

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் பக்தர்கள் வழங்கிய காணிக்கை ரூபாய் 58 லட்சம்.

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரகநாதசுவாமி திருக்கோயில் இன்று காலை இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இப்பணியினை மாலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவர் சுவாமி திருக்கோயில் உதவி ஆணையர் ஹரிஹர சுப்பிரமணியன் , கோயில்…

திருச்சி காவேரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு – விவசாய நிலத்தில் புகுந்த தண்ணீர்.

மேட்டூர் அணையிலிருந்து இரண்டாவது நாளாக ஒரு இலட்சத்து 32 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட முக்கொம்பூர் மேலணைக்கு வந்துகொண்டிருப்பதை முன்னிட்டு , முக்கொம்பூர் காவிரியாற்றில் 47,874 கன அடியும் , கொள்ளிடம் ஆற்றில் 65,639 கன…

44 – வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி – விழிப்புணர்வு பலகையில் கையெழுத்து போட்டு, செல்பி எடுத்துக் கொண்ட கலெக்டர் பிரதீப் குமார்

44 – வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது . இதுவரை இந்தியாவில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வுகளிலேயே மிகப்பெரிய போட்டியாக கருதப்படும் இந்த ஒலிம்பியாட் போட்டியில் உலகின்…

விசாரணைக்கு வந்த போலீசாரை தாக்கி, சீருடையை கிழித்த போதை ஆசாமி – திருச்சியில் நடந்த பரபரப்பு.

திருச்சி நெ.1 டோல்கேட் ஒய் ரோடு அருகே கஞ்சா போதையில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் எதிரே வந்த மோட்டார் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இதனை தட்டிக்கேட்ட வாகன ஓட்டிகளிடம் அவர் கத்தியை காட்டி மிரட்டி…

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்கிறது – அமைச்சர் செந்தில் பாலாஜி.

தமிழக மின் கட்டணத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன – என மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அதன் படி 100 யூனிட் இலவச மின்சாரம் திட்டம் தொடரும் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50 கூடுதலாக மின் கட்டணம்…

திருச்சியில் கள்ளத் தனமாக மது விற்ற பிரபல “ரவுடி சரண்” கைது – மது பாட்டில்கள் பறிமுதல்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம் , பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் , கோவில்கள் உள்ளிட்ட பொது இடங்களில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்து வருவதாக அப்பகுதியை சேர்ந்த…

சுதந்திர போராட்ட தியாகிகள் சந்தா சாஹிப், மாப்பிள்ளா மார்கள், ஆகியோருக்கு தமிழக அரசு மணிமண்டபம் அமைத்து தர வேண்டும் – பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநாட்டில் தீர்மானம்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் மக்களாட்சியை பாதுகாப்போம் மக்கள் சங்கமம் மாநாடு பொதுக்கூட்டம் திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே நடந்தது. இந்த மாநாடு பொதுக்கூட்டத்தின் துவக்கமாக பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயலாளர் அப்சல் கான் வரவேற்புரையாற்றினார். பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட…

காவேரி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர் – படித்துறையில் மக்கள் செல்ல தடை.

தென்மேற்கு பருவமழை காரணமாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 அடியை எட்டியது தொடர்ந்து , 1 லட்சத்து 10 ஆயிரம் கன அடி நீர் முக்கொம்புக்கு மேலனைக்கு வந்து கொண்டிருக்கிறது. அங்கிருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால். காவிரி…

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி விவகாரம் – திருச்சியில் தனியார் பள்ளிகள் விடுமுறை.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார்(சக்தி) பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவி கடந்த 13-ஆம் தேதி அன்று மர்ம முறையில் உயிரிழந்தார். இவரது மரணத்திற்கு நீதி கேட்டு நேற்றைய தினம் தனியார் பள்ளி முழுவதும் சேதப்படுத்தப்பட்டு தீக்கிரையாக்கப் பட்டது. இதனை…