Month: July 2022

தமிழக அளவில் நடந்த கோ-கோ ஸ்கேட்டிங் போட்டி – சாம்பியன் ஷிப் கோப்பையை கைப்பற்றிய திருச்சி அணி.

தமிழ்நாடு மாநில அளவிலான 2-வது கோ-கோ ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டி ஸ்ரீரங்கம் மேலூர் சாலை பகுதியில் உள்ள கிரீன் ஸ்கேட்டிங் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த கோ-கோ ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டியை தமிழ்நாடு ஸ்கேட்ஸ் கோகோ அசோசியேஷன் தலைவர் சுரேஷ்குமார் தொடங்கி…

திருச்சியில் மது போதையில் வாலிபர்கள் மோதல் – போலீஸ்காரர் தம்பி உட்பட இருவர் மீது வழக்கு.

திருச்சி மத்திய பஸ் ஸ்டாண்ட் பெரியார் சிலை அருகே உள்ள தனியார் ஹோட்டல் முன்பாக இரு கார்களை நிறுத்துவதில் இரு தரப்பு வாலிபர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இரு கார்களிலும் வந்த வாலிபர்கள் குடிபோதையில் இருந்ததால் ஒருவருக்கு ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.…

தஞ்சை பெருவுடையார் கோவில் சொத்துக்களை தமிழக அரசு மீட்டெடுக்க வேண்டும் – மாநில பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் பேட்டி.

பூர்வீக தமிழர் குடியாட்சி அமைப்போம் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர் கூட்டம் திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் குருநாதர் வரவேற்புரை ஆற்றிட, மாநில பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாநில…

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திருச்சி திட்ட செயலாக்கப் பிரிவு சாா்பில் நடந்த “அளவற்ற மகிழ்வு” விழா.

இந்திய சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, திருச்சியில் சாலைப் பாதுாப்பு விழிப்புணா்வு, விபத்தில்லா சாலையாக மாற்றுதல் குறித்த விவாதம், ஒருங்கிணைந்த செயல்பாடு, அளவற்ற மகிழ்வு, சிறப்பாக பணியாற்றியோருக்கு பாராட்டு என பல்வேறு நிகழ்வுகள் திருச்சி மத்திய பேருந்து…

போதைப் பொருட்களை ஒழிக்க தமிழக அரசை வலியுறுத்தி பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாட்டில் இளைய தலைமுறையினரை சீரழிக்கும் போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரி பா.ம.க. சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று ஆரப்பட்டம் நடைபெற்றது. அதே போல திருச்சியில் பாமக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக அருகே…

திருச்சி யானைகள் மறுவாழ்வு மையத்தில் ரோஹினி யானை உயிரிழப்பு.

தமிழகத்தின் பல்வேறு பகுதியில் தனியார் வசம் இருந்த யானைகள், சட்டவிரோதமாக வளர்க்கப்பட்டு வந்த யானைகளை மீட்டு அவற்றை பராமரிப்பதற்காக திருச்சி எம்.ஆர் பாளையத்தில் யானைகள் மறுவாழ்வு மையத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. இந்த யானைகள் மறுவாழ்வு மையத்தில் மீட்கப்படும் யானைகளை…

ஆர்சி பள்ளி மாணவர்களை கண்டித்து – சாலையில் அரசு பேருந்துகளை நிறுத்தி ஓட்டுனர், நடத்துனர்கள் போராட்டம் – திருச்சியில் பரபரப்பு.

திருச்சி பாரதியார் சாலையில் பகுதியில் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி சென்ற அரசு பேருந்து ஒன்று இன்று மதியம் ஆர்சி மேல்நிலைப்பள்ளி முன்பு உள்ள பஸ் நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றிக் கொண்டு இருந்தது அப்போது…

திருச்சியில் அரசு பஸ் விபத்து – சிறுவன் உள்பட 5 பேர் காயம்.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து அமெரிக்கன் வழியாக அரசு மருத்துவமனை சாலை, தென்னூர் சாலை, தில்லை நகர் பகுதி வழியாக சத்திரம் பேருந்து நிலையத்திற்கு செல்வதற்காக வண்டி எண் TN 45 N 3534 பதிவு கொண்ட அரசு பேருந்து 40-க்கும்…

திருச்சி விமான நிலையத்தில் 800 கிராம் தங்க கட்டிகள் பறிமுதல் – பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை.

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து தினம் தோறும் பல்வேறு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா விமானம் நேற்று காலை வந்தடைந்தது .இதில் தங்கம் கடத்துவதாக சுங்கத்துறை வான் நுண்ணறிவு அதிகாரிகளுக்கு ரகசிய…

தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 101 பேர் குண்டர் சட்டத்தில் கைது – திருச்சி கமிஷ்னர் அதிரடி.

திருச்சி மாநகரில் கடந்த 20 வருடங்களில் இல்லாத வகையில் இந்த வருடம் 7 மாதங்களில் பொது அமைதிக்கும் குந்தகம் விளைவித்ததாக 80 நபர்கள் மீதும் , மருந்து சரக்கு குற்றவாளிகள் 11 நபர்கள் மீதும் , பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாலியல்…

ஆடி 2-வது வெள்ளியை முன்னிட்டு வெக்காளி அம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்.

திருச்சி உறையூர் அருள்மிகு வெக்காளி அம்மன் ஆலயத்தில் ஒவ்வொரு ஆடி வெள்ளிக் கிழமையிலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பெரும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று இரண்டாவது ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் உறையூர் வெக்காளியம்மன் கோவிலில்…

திருச்சியில் மின்சாரம் தாக்கி அண்ணன், தம்பி பரிதாப பலி

திருச்சி மண்ணச்சநல்லுார் பங்குனி பாலம் அருகே உள்ள கருப்பு கோயிலில் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது , இந்த பூஜையில் கலந்து கொள்வதற்காக அத்தாணி கிராமத்தை சேர்ந்த அண்ணன், தம்பிகளான மாரிமுத்து, அரவண் ஆகியோர் கோவிலுக்கு…

கடந்த 13 நாட்களில் சமயபுரம கோவில் காணிக்கை ரூ. 1.14 கோடி ரொக்கம், 2.4 கிலோ தங்கம், 4.2 கிலோ வெள்ளி.

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து சென்று…

போக்குவரத்து ஊழியர்களின் சம்பள ஒப்பந்தத்தை தமிழக முதல்வர் தலையிட்டு தீர்வு காண வலியுறுத்தி ஏஐடியுசி சார்பாக ஆர்ப்பாட்டம்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு துணைத் தலைவர் வெள்ளைச்சாமி தலைமை தாங்கினார் ஏ ஐ டி யு சி மாவட்ட செயலாளர் சுரேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார். இதில் 14வது ஊதிய ஒப்பந்தத்தை பேசி இறுதி படுத்த வேண்டும்.…

ஆடி அமாவாசை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் தர்ப்பணம் கொடுக்க குவிந்த பொதுமக்கள்.

ஆடி அமாவாசை,தை அமாவாசை மற்றும் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது பன் நெடுங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்கமாகும். அந்த வகையில் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு தங்களது முன்னோர்களுக்கு…