6 வயது சிறுவன் ஒருவன் மற்ற சிறுவர்களுடன் சேர்ந்து ஊர் கிணற்றில் குளிக்க செல்வதாக தனது தாயிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் சிறுவன் வீட்டிற்கு வராத காரணத்தினால் 6 வயது சிறுவனின் தாய் கிணற்றின் அருகே சென்று பார்த்தபோது அதே பகுதியை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவன் தனது 6 வயது மகனிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது, மேலும் சிறுவனின் தாயை கண்டவுடன் அந்த பள்ளி மாணவன் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டான்.

இதுகுறித்து சிறுவனின் தாய் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் 15 வயது சிறுவனை கைது செய்து அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு. சிறுவர் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கையில் இது போன்று குற்ற சம்பவங்களில் பள்ளி மாணவர்கள் ஈடுபடாமல் தடுப்பதற்கு சிறுவர்களுக்கு பள்ளிகளில் முறையான விழிப்புணர்வு, ஆலோசனைகள் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *