திருச்சி வாழை ஆராய்ச்சி மையத்தின் நிறுவன நாள் மற்றும் விவசாயிகள் தின விழா திருச்சி மாவட்டம், அதவத்தூரில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி வளாகத்தில் இயக்குனர் உமா தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் ஆந்திரா மாநில அரசு சிறப்பு செயலாளர் முனைவர் பூனம் மல்லகொண்டையா, தமிழ்நாடு தோட்டக்கலை நிறுவனத்தின் இயக்குனர் முனைவர் பிருந்தாதேவி, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் பெங்களூர் தோட்டக்கலை நிறுவனத்தின் இயக்குனர் டோபிசர்மா, மத்திய தோட்ட பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில் இயக்குனர் அனிதாகரூன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர். இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இயற்கை உரங்கள் கொண்டு விவசாயத்தில் சாதனை புரிந்த விவசாயிகள் மற்றும் வாழை மற்றும் அதன் மூலம் பெறப்படும் மற்ற பொருட்கள் மூலமாக விற்பனையில் சாதனை படைத்தவர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தலைமை உரையாற்றிய தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் உமா
இந்த ஆராய்ச்சி மையத்தின் மூலம் 400மில்லியன் வாழை கன்றுகள் ஆராய்ச்சி செய்து வழங்கப்பட்டுள்ளது.அதே போல் ஒரு செல் மூலம் 10ஆயிரத்திற்கு அதிகமான ஆய்வுகள் செய்யும் அளவிற்கு தொழில் நுட்பம் இந்த ஆராய்ச்சி உள்ளதாகவும். அதே போல் வாழைக்கன்றுகள் 15 ரூபாய் முதல் 25ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இந்த மையத்தால் 3முதல் 4ரூபாய் வரை நாம் வழங்க முடியும். தற்போது அழிந்து வரும் மனோரஞ்சிதம் மற்றும் கருவாழை பயிர்களை அதிகப்படுத்த மத்திய,மாநில அரசுகள் உதவி செய்திட வேண்டும். குறிப்பாக பள்ளி, கல்லூரி, ஆராய்ச்சி மாணவர்களுக்கு வாழை ஆராய்ச்சியை ஒரு பாடமாக வைக்க வேண்டும்.
கடந்த ஓராண்டில் இந்த மையத்திற்கு சுமார் 3500க்கும் அதிகமானவர்கள் வந்து சென்றுள்ளார். வாடல் உள்ளிட்ட நோய்கள் தாக்காத ஒரு புது ரக வாழையை அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். வைரஸ் நோய்தாக்கம் குறித்து அறிந்துகொள்ள விவசாயிகளுக்கு என்று ஒரு செயலி அறிமுகம் படுத்தப்பட்டுள்ளது. 40 நாடுகளுக்கு வாழையை ஏற்றுமதி செய்வதற்கு சி- ப்ரோட்டோகால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசானது வாழை பதப்படுத்துதல் செய்வதற்கான 2.5கோடி நிதி வழங்கி அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. வாழை பழத்தில் இருந்து பவுடர் தயாரித்து அதனை கொண்டு பேக்கரிகளில் கேக்குகள் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.