தமிழக பாஜக ஊடகப்பிரிவு திருச்சி பெருங்கோட்டச் சார்பாக திருச்சி மாநகர் மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் ஊடகப்பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஊடகப்பிரிவு மாநில செயலாளர் சிவகுமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் கண்ணன், திருச்சி பெருங்கோட்ட அமைப்பு செயலாளர் பாலன்,

மாவட்ட பொதுச் செயலாளர் லீமா சிவகுமார், ஊடகப்பிரிவு மாநில செயலாளர் குரு, ஸ்ரீதர், திருச்சி பெருங்கோட்டத்துக்கு உட்பட்ட மாவட்ட தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சி முடிவில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு செய்திகளை பேசினாலும் குறிப்பாக வருகின்ற அணி பிரிவுகள் மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
