திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்கள் மற்றும் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மற்றும் சந்திப்பு நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்டணியின் முக்கிய வேட்பாளர்கள் கலந்துகொண்டு, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து தங்களது தொகுதிகளுக்கான ஆதரவைத் திரட்டினர்: திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி: வேட்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்துகொண்டு ஆதரவு கோரினார்.

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி: வேட்பாளர் இனிகோ இருதயராஜ் அவர்கள் கலந்துகொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். மணப்பாறை சட்டமன்றத் தொகுதி: வேட்பாளர் அப்துல் சமத் அவர்கள் கலந்துகொண்டு ஆதரவு திரட்டினார். இந்தச் சந்திப்பின் போது, மாநகரக் கழகச் செயலாளர் மு மதிவாணன் காங்கிரஸ் பேரியக்கத்தின் தெற்கு மாவட்ட தலைவர் ராஜலிங்கம் மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் மற்றும் மாநில மாவட்ட வட்டார நிர்வாகிகள் வேட்பாளர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பது குறித்தும், கூட்டணி கட்சிகளின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய களப்பணிகள் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி பிரதிநிதிகள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்