சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் 135-வது பிறந்த நாளை முன்னிட்டு, இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் அண்ணல் அம்பேத்கரின் திருவுருவ சிலைகள் மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகே அமைந்துள்ள டாக்டர் அம்பேத்காரின் திருவுருவ சிலைக்கு அதிமுக சார்பில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன், தலைமையில் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராஜசேகரன் அவரது திருஉருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் பத்மநாதன், அம்மா பேரவை மாநில துணை செயலாளர் வெல்லமண்டி ஜவகர், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன், கவுன்சிலர் அம்பிகாபதி, பகுதி செயலாளர்கள், வெங்கட் பிரபு ,ரோஜர், அன்பழகன், எம் ஆர் ஆர் முஸ்தபா மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
