தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று இன்று காலை 7.00மணிக்கு விறுவிறுப்பாக நடைபெற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் மற்றும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்ட நான்கு அணிகளாக போட்டியிட்டனர்.

தமிழகத்தில் 5 கோடியே 73 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதில் 2.93 கோடி பெண் வாக்காளர்களும், 2.83 கோடி ஆண் வாக்காளர்கள் மற்றும் 7,728 மூன்றாம் பாலினத்தவர்கள் வாக்களிக்க உள்ளனர். அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன்படி 18 லட்சத்து 34 ஆயிரத்து 485 பேர் வாக்களித்துள்ளனர். மேலும் திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை 85.44% வாக்கு பதிவு ஆகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *