3- வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த பல மாதங்களாக போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று அரை நிர்வாணத்துடன் விவசாயிகள் கையில் சட்டி ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தின் கோரிக்கைகளாக;-
3- வேளாண் சட்டங்களால் இளைஞர்கள் ஆண்மை இழக்காமல் இருக்க உடனே அதை ரத்து செய்ய வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபம் தரும் விலையை வழங்கும் வரை அனைத்து விவசாயிகள் அனைத்து வங்கிகளிலும் வாங்கிய வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.
காவிரி டெல்டா விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளாமல் இருக்க ஒரு டிபிசிக்கு தினம் குறைந்தது 5,000 நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும். உத்திரபிரதேசத்தில் அமைதியாக ஊர்வலம் சென்ற விவசாயிகள் திட்டமிட்டு கொலை செய்தவர்களும்
செய்யத் தூண்டியவர்களும் மரணதண்டனை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மூன்றாவது நாளாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் கையில் சட்டியை ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக நடந்து சென்ற பெண்மணி ஒருவர் அரை நிர்வாணத்துடன் விவசாயிகள் கையில் சட்டியுடன் பிச்சை எடுக்கும் போராட்டத்தை கண்டு மனம் உருகி தனது சுருக்குப் பையில் வைத்திருந்த ஒரு சிறு தொகையை விவசாயிகளின் சட்டியில் அளித்துவிட்டு சென்றார். இதை கண்ட பொதுமக்கள் மத்தியில் ஒரு நெகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.