ஆயுத பூஜை கொண்டாடும் முறை:-

ஆயுத பூஜையன்று சிறிய கரண்டி முதல் தொழில் இயந்திரங்கள் வரை எல்லா வகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தமாகத் துடைத்து தேவையெனில் வண்ணம் தீட்டி, எண்ணைப் பொட்டு வைத்து பூஜைகள் செய்து அவற்றுக்கு ஓய்வு கொடுப்பதும், பிறகு எடுத்து தொழிலுக்குப் பயன்படுத்துவதும் ஆயுதபூஜையின் சிறப்பம்சமாகும்.

சரஸ்வதி பூஜை கொண்டாடும் முறை:-

வ‌ழிபாடு செ‌ய்வத‌ற்கு மு‌ன்பு, வ‌ழிபடு‌ம் இட‌த்தை தூ‌ய்மை‌ப்படு‌த்தி ச‌ந்தன‌ம் தெ‌ளி‌த்து, கு‌ங்கும‌ம் இட வே‌ண்டு‌ம். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து பூஜையில் வைத்து விநாயகரை வணங்கிய பின்னரே சரஸ்வதிக்கான பூஜையை ஆரம்பித்தல் வேண்டும். சர‌ஸ்வ‌தி‌யி‌ன் பட‌த்‌தி‌ற்கு‌ படை‌க்க‌ப்பட பொரு‌ட்களு‌க்கு‌ம் ச‌ந்தன‌ம் கு‌ங்கும‌ம் இட வேண்டும். சர‌ஸ்வ‌தி‌யி‌ன் பட‌த்‌தை பூ‌க்க‌ளால் அல‌ங்க‌ரி‌க்க வே‌ண்டு‌ம். சரஸ்வதி படத்தின் கீழ் வாழை இலை விரித்து அதில் படையலுக்காக சமைக்கப் பட்டவைகளை வைக்க வேண்டும். சரஸ்வதி படத்தின் அருகில் புத்தகங்களை வைக்க வேண்டும். படையலுக்காக பழங்கள், பொறி, நாட்டு சர்க்கரை, கடலை, அவல் இவை அனைத்தும் வாழையிலையில் வைக்க வேண்டும். பின்னர் கலசம் வைத்து அதில் தேவியை முறைப்படி எழுந்தருளச் செய்து பூஜித்து வழிபட நலன் உன்டாகும். கலைவாணியை பூஜித்து வணங்கினால் அருள் பூரணமாய் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *