108 திவ்யதேசங்களில் முதன்மையானதும் பூலோகம் வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலின் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த சனிக்கிழமை முதல் திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. பகல் பத்து ராப்பத்து என 21 நாட்கள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி பகல் பத்து 3- ம் நாளான இன்று (06.12.2021) ஸ்ரீ நம்பெருமான் அலங்கார கொண்டை அணிந்து, காசு மாலை, திருமார்பில் அழகிய மணவாளன் பதக்கம், மகாலட்சுமி பதக்கம், வைரஅபயஹஸ்தம், முத்துச்சரம், வைர ஒட்டியானம், ரத்தின திருவடி அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவைசாதித்தார். அதனைத்தொடர்ந்து நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து தனுர் லக்னத்தில் புறப்பட்டு பகல் பத்தான அர்ஜூன மண்டபத்திற்கு சென்றடைந்தார் .அங்கு நம்பெருமாளுக்கு அரையர் சேவையுடன் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இதில் எராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ரங்கா ரங்கா என கோஷமிட்டனர் பின்பு இரவு 9.00 மணிக்கு அர்ஜூன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 10.00 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார் .

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *