Author: JB

திருச்சியில் கத்தி காட்டி மிரட்டி சரக்கு பறித்த இரு வாலிபர்கள் கைது.

திருச்சி திருவானைக்காவலில் செயல்பட்டு வரும் ஒரு மதுபான கடையில் இரு வாலிபர்கள் மது வாங்குகின்றனர்.அப்போது விற்பனையாளர் மது பாட்டிலை கொடுத்து காசு கேட்கும் பொழுது அவரிடம் வம்பு செய்யும் அந்த இளைஞர்களில் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி காசு கொடுக்க முடியாது…

திருச்சியில் பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு.

திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியில் உள்ள அரசமர பஸ் ஸ்டாப் அருகே பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்வதற்காக பெரிய குழாய்கள் போடப்பட்டிருந்தது. இந்த குழாயின் ஓரமாக பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வந்துள்ளனர். இந்நிலையில் இன்று மதியம் ஒரு மணி அளவில் திடீரென அந்த…

திருச்சி மத்திய மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு.

திருச்சி மத்திய மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் பேரூர் அவைத் தலைவர் தர்மலிங்கம் தலைமையில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.. இந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.. திமுக இளைஞரணி…

திருச்சியில், போதை மாத்திரைகள் விற்ற வாலிபர் போலீசாரால் கைது.

திருச்சி மாநகரில், போதை ஏற்படுத்தும் எல்.எஸ்.டி., என்ற லைசெர்கிஸ் ஆசிட் டைத்லாமைட், மைத்தாம்பிடமைன் போன்ற மாத்திரைகள் விற்கப்படுவதாக, மாநகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, திருச்சி சிந்தாமணி பகுதியில், நேற்று, ஹரிஹரன்,23, என்ற வாலிபரை சந்தேகத்தின் பேரில், போலீசார் பிடித்து விசாரித்தனர்.…

ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா- கூடுதல் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு கமிஷனர் பேட்டி.

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது, பகல் பத்து – இராப்பத்து நிகழ்வு மட்டுமன்றி சொர்க்கவாசல் திறப்பின் போதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வருகிற ஜனவரி 2ஆம் தேதி அதிகாலை வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பின்…

திருவெள்ளறை ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு விழா. பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய கலெக்டர்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு் முகாமில் பல்வேறு அரசுத்துறை சார்பில் அமைக்கப்பட்ட காட்சியகத்தை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.பின்னர் பேசிய மாவட்ட ஆட்சியர் ஒவ்வொரு அரசுத்…

தேசிய வாழை ஆராய்ச்சி மையம் சார்பில் திருச்சியில் வாழை கண்காட்சி.

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் சார்பில் வாழை ரகங்களை ஏற்றுமதி மற்றும் சந்தைப்படுத்துவது குறித்த கருத்தரங்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது இதில் 200க்கும் மேற்பட்ட ஏற்றுமதி அவர்கள் கலந்து கொண்டனர். மேலும்…

திருச்சியில் உள்ள ஜேசிபி வண்டிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் திருச்சி எர்த் மூவர்ஸ் உரிமை யாளர்கள் நலச் சங்கத்தினர் தமிழக அரசிடம் கோரிக்கை.

திருச்சி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் நலச்சங்க துவக்க விழா திருச்சியில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட பொருளாளர் தர்மர் வரவேற்புரை ஆற்றிட மாவட்ட தலைவர் மஞ்சுநாதன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் டோமினிக் ராஜ்குமார் துணைத் தலைவர்கள் யுவனராஜ், மகேஸ்வரன் ஆகியோர்…

திருப்தி இல்லாத புகார்கள் மீது மறு விசாரணை செய்த எஸ்பி சுஜித் குமார்.

திருப்தி இல்லாத புகாரர்கள் மீது மறு விசாரணை நடைபெறும் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை திருப்தி இல்லாத புகாரர் அளித்தவர்களை மறுபடியும் வர வைத்து அந்தந்த உட்கோட்ட துணை…

திருச்சியில் முதல்வர் வருகை – முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள்.

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான நலத்திட்ட உதவிகள், திருச்சி மாவட்டத்தில் பல்வேறு முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கான அடிக்கல் நாட்டி,அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக வருகிற 29-ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர்…

வருகிற ஜனவரி 8, 9 ஆகிய தேதிகளில் 6-வது சித்தர் தின விழா – மத்திய,மாநில அமைச்சர்கள் பங்கேற்பு – திருச்சியில் இயக்குனர் மீனாகுமாரி பேட்டி.

தேசிய சித்த மருத்துவ கவுன்சில், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை சார்பில் 6வது சித்தர் தின விழா வருகிற ஜனவரி 8, 9, ஆகிய நாட்கள் கொண்டாப் படுகிறது. இது குறித்து திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனையில் மாவட்ட சித்த மருத்துவ…

திருச்சியில் ஆசிரியையின் கையை கத்தியால் கீறி 3 பவுன் நகை பறிப்பு – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.

திருச்சி மாவட்டம் கொணலை ஊராட்சி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் விமலா ராணி வயது 59 . இவர் பிச்சாண்டார்கோவில் ஊராட்சியில் உள்ள ராஜா உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை தனது பணியை முடித்துவிட்டு கல்பாளையத்தில்…

திருச்சியில் 2 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் கிழக்கு வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் – முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக திருச்சி மாவட்டம், கொட்டப்பட்டு கால்நடை பராமரிப்புத்துறை அலுவலக வளாகத்தில் ரூபாய் 2.60 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள திருச்சி கிழக்கு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக…

திருச்சியில் செல்லப் பிராணிகளின் பிறந்தநாள் விழா – கேக் வெட்டிக் கொண்டாடிய குடும்பத்தினர்.

திருச்சி,தென்னூர், காம்ராஜ் நகரில் வசிக்கும் முருகன், வள்ளி தம்பதியினர் கடந்த 18-12-2021 முதல் ஆண் நாய்க்குட்டிக்கு *(ஹிட்டு)* மற்றும் பெண் நாய்க்குட்டிக்கு *(சார்வி)* எனப் பெயர் வைத்து இரண்டு நாய்க்குட்டிகளை வளர்த்து வருகின்றனர். மேலும் *ஹிட்டு,சார்வி* எனப் பெயரிடப்பட்ட இரண்டு நாய்க்குட்டிகளுமே…

திருச்சியில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட ” பீட்” போலீஸ் ரோந்து வாகனம் – தொடங்கி வைத்த கமிஷனர்.

திருச்சி மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் உள்ள 50 பீட் ரோந்து அலுவலுக்கு மூன்று ஷிப்டுகளில் சுழற்சி முறையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் மற்றும் குற்றச்சம்பவங்கள் தடுக்கவும் 200 காவலர்களை பணிநியமித்து இத்திட்டம் இன்று கே.கே.நகரில் உள்ள மாநகர ஆயுதப்படை…

தற்போதைய செய்திகள்