Author: JB

திருச்சி ஆபட் மார்சல் RC பள்ளியில் ஆசிரியர் தின விழா இன்று கொண்டாடப்பட்டது.

செப்டம்பர் 05-ம் தேதி சர்வபள்ளி டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை இந்திய முழுவதும் ஆசிரியர் தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி செம்பட்டு ஆபட் மார்சல் RC தொடக்க மற்றும் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா இன்று…

திருச்சியில் (04-09-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 47 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 47 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 542 பேர்…

விஸ்வரூபம் எடுக்கும் தாசில்தார் விவகாரம் – தமிழகம் முழுவதும் போராட்டம் அறிவிப்பு.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தாசில்தார் தாக்கப்பட்ட சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று வருவாய்த் துறை அலுவலர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நகர நிலவரித் திட்ட தனி தாசில்தாராக பணிபுரிந்து வருபவர்…

திருச்சியில் முதியவரை தாக்கி பணம் பறிக்கும் கொள்ளையர்களின் சிசிடிவி வீடியோ காட்சிகள்.

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை நடுக்கொண்டையம்பேட்டை மல்லிகைபுரம் பகுதியில் வசிப்பவர் ரவிந்திரன் இவரது சகோதரர் மனோகரன் வயது (65) வழக்கம்போல் வீட்டின் வாசலில் தூங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் வந்த 2 கொள்ளையர்கள் சாலையில் நின்றிருந்த லாரியின்…

திருச்சியில் நடந்த தேசிய ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு பேரணியை திமுக மாவட்ட துணைச் செயலாளர் முத்துசெல்வம் தொடங்கி வைத்தார்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.. அந்த வகையில் திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அங்கன்வாடி மையத்தில் “ஆரோக்கியமான வாழ்கை நோக்கி ஒருங்கிணைந்த பயணம்” என்ற தலைப்பில் ஊட்டச்சத்து மாத விழா துவங்கியது. இந்நிகழ்ச்சியினை…

திருச்சியில் (03-09-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 58 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 62 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 545 பேர்…

கொரோனா தொற்று பாதித்த குழந்தைக்கு “செயற்கை சுவாசம்” அளித்த செவிலியருக்கு குவியும் பாராட்டுகள்.

கொரோனா நோய் தொற்று பாதித்த குழந்தைக்கு “வாயோடு வாய் வைத்து செயற்கை சுவாசம்” அளித்த கேரளா மாநிலத்தை சேர்ந்த செவிளியர் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு செல்போன் மூலம் மருத்துவர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள்…

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் உயிரிழந்த கணவர்-சாவிலும் இணைபிரியாத தம்பதிகள்..

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியத்தில் மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவன் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி பரமசிவம் வயது( 70 ). இவரது…

ஆசிரியர் பட்டய படிப்பு நேரடி தேர்வுக்கு கால அவகாசம் கேட்டு தேர்வை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள்.

ஆசிரியர் பயிற்சி பட்டய படிப்பு படித்து வரும் மாணவர்களுக்கு தொடக்கக்கல்வி பட்டய தேர்வு நேற்று முதல் துவங்கியது.இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் முதல் 12000 மாணவர்கள் எழுதுகின்றனர். இந்த நேரடி தேர்வில் விடைத்தாள் திருத்தும் நடைமுறையில் குளறுபடிகள் இருப்பதாகவும்,…

பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய காவலருக்கு – கமிஷ்னர் பாராட்டு.

திருச்சி மாநகர காவல்துறை சார்பாக சிறப்பான பணிகளை செய்வோர்கள் கண்டறியப்பட்டு, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் நேரில் அழைத்து பாராட்டி பணிப்பாராட்டு சான்றிதழ் வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தலைமை தபால்நிலையம் பகுதியில்…

திருச்சியில் (02-09-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 59 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 66 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 545 பேர்…

சாம்பியன்ஷிப் பெற்ற சிலம்ப வீரர் வீராங்கனைகளுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு.

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் போட்டிகள் ஹரியானாவில் உள்ள சிர்ஷா கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி முதல் 30-ம் தேதி வரை 3 நாட்களுக்கு நடந்தது. இதில் கிரிக்கெட் கபடி சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடந்தது…

திருச்சி கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை திருட்டு

திருச்சி எடமலைப்பட்டி புதூர் அருள்மிகு ஸ்ரீ காளிகா பரமேஸ்வரி ஆலயம் உள்ளது இந்த கோவிலின் பூசாரியாக இருப்பவர் அய்யனார் வழக்கம்போல் இன்று காலை கோயிலை திறந்து பூஜை செய்வதற்காக வந்துள்ளார் அப்போது கோயிலின் உள்ளே உள்ள உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை…

பொதுத்துறை நிறுவனங்களை 6 லட்சம் கோடிக்கு ஏலம் விடும் ஒன்றிய அரசை கண்டித்து – மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

நீர்மின் உற்பத்தி, சூரிய மின்சக்தி, காற்றாலை மின் நிலையங்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை 6 லட்சம் கோடிக்கு ஏலம் விடுவதை கைவிட வேண்டும். விவசாயிகளையும், பொதுமக்களையும் பாதிக்கும் மின்சார சட்ட திருத்த மசோதா 2021-ஐ கைவிட வேண்டும். ரயில்வே,…

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பக்தர்களின்றி நடந்த உறியடி உற்சவம்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி உறியடி உற்சவம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாதந்தோறும் நடைபெறும் விழாக்களில் ஆவணி மாதம் நடைபெறும் கிருஷ்ண ஜெயந்தி புறப்பாடு மற்றும் உறியடி உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு…