Author: JB

குண்டூர் ‌அய்யம்பட்டி செல்லாயி அம்மன் கோயிலில் வருகிற 16-ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது‌.

திருச்சி விமான நிலையம் அருகே உள்ள குண்டூர் அய்யம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ அருள்மிகு செல்லாயி அம்மன் சப்பாணி கருப்பு கோயில் உள்ளது. இந்த கோயிலில் வருகின்ற 16ஆம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 07.30 மணி முதல் 09.00…

ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறைகளை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசை கண்டித்து ஆர்மெரி கேட் முன்பு SRES மற்றும் NFIR தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

எஸ்.ஆர்.இ.எஸ் மற்றும் என்.எப்.ஐ.ஆர் தொழிற் சங்கத்தின் சார்பில் நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி பொன்மலை ஆர்மெரி கேட் முன்பு இன்று காலை இரயில்வே தொழிலாளர்களின் பாதுகாவலர் Dr.இராகவையாஜி உத்திரவின்படி பணிமனை கோட்டத்தலைவர் பவுல்…

திருச்சியில் (13-09-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 44 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 68 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 559 பேர்…

செவிலிய உதவியாளர்களுக்கு அரசு பணி நிரந்தரம் செய்யக்கோரி அடையாள உண்ணாவிரதம் – செயலாளர் ஆமூர் சுரேஷ்ராஜா அறிவிப்பு.

செவிலிய உதவியாளர்களுக்கு அரசு பணி நிரந்தரம் செய்யக்கோரி செவிலிய உதவியாளர்கள் நல சங்கத்தின் செயலாளர் ஆமூர் சுரேஷ்ராஜா தலைமையில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு அளிக்க வந்தனர். இதுகுறித்து சங்க செயலாளர் ஆமூர் சுரேஷ்ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்.…

செப்-17ம் முதல் அக்-7ம் தேதி வரை சேவா சமர்பன் பிரச்சாரம் துவக்கப்படும் – பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் சிடி.ரவி பேட்டி

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மாவட்டந்தோறும் மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்திவருகிறார். அதன்படி திருச்சி வயர்லெஸ் ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் மாநில நிர்வாகிகள் கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு பாஜகவின் தேசிய பொதுச்…

அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் சார்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம்.

அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் டெல்லி சிவில் டிபன்ஸ் பெண் காவல்துறை அதிகாரிக்கு நீதி வேண்டியும், இந்தக் கொடும் செயலில் ஈடுபட்ட உண்மைக் குற்றவாளிகளை கண்டறிந்து தகுந்த…

முத்தரையரின் திருவுருவச் சிலையை அகற்ற முயற்சிக்கும் ஆளும் அரசை கண்டித்து தமிழ்நாடு வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் திருச்சி மாநகரில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் திருவுருவச் சிலையை அகற்ற முயற்சிக்கும் ஆளும் அரசை கண்டித்து சிலை அருகாமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல் தாணு வரவேற்றார்.…

வாய்க்காலில் மூழ்கி மாயமான சிறுவன் – தேடும் பணியில் போலீசார்.

திருவெறும்பூர் அருகே உள்ள பழங்கனாங்குடி பகுதியில் கட்டளை வாய்க்காலில் குளித்தபோது தண்ணீரில் முழுகி மாயமா மாணவனின் உடலை துவாக்குடி மற்றும் மாத்தூர் போலீசார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை குளத்தூர் தாலுகா காயாம்பட்டியை சேர்ந்தவர் பாஸ்கர் இவர் திருச்சி என்ஐடி கல்லூரியில் ஊழியராக…

பிஜேபி நிர்வாகி கொலை மிரட்டல் விடுவதாக கூறி மனு அளிக்க வந்த மூதாட்டி மயங்கி விழுந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு.

திருச்சி மாவட்டம் பிராட்டியூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்கொடி வயது 61 இவரது கணவர் பரமசிவம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருவரும் திருமணம் முடிந்து குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகின்றனர். இதில் ஜெயக்கொடியான…

ம.ஜ.க. நிர்வாகி படுகொலை – ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

ம.ஜ.க. நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், கடந்த ஜூலை மாதம் 26-ம் தேதி அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்ற…

அமைச்சர் சேகர்பாபு காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான 177 ஏக்கர் நிலத்தை 24 மணி நேரத்தில் மீட்டால், இந்து அறநிலை துறை பற்றி இனிமேல் பேசமாட்டேன் – எச்.ராஜா பரபரப்பு பேட்டி.

திருச்சி இந்திரா கணேசன் கல்லூரியில் பாஜக சார்பில் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு நாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான பேச்சுப் போட்டி இன்று நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பாஜக முன்னாள் தேசிய தலைவர் எச்.ராஜா கலந்து கொண்டு…

திருச்சியில் 100% கொரோனா தடுப்பூசி செலுத்திய ஊராட்சிக்கு – கலெக்டர் பாராட்டு.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள திருவெள்ளரை ஊராட்சியில் அனைத்து கிராம மக்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால், இந்த ஊராட்சி 100 சதவீத தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஊராட்சி என்ற பெருமையினைப் பெற்றுள்ளது. மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் 35 ஊராட்சிகள்…

“முதல்வர்’ உத்தரவை காற்றில் பறக்க விட்ட “கல்வி அமைச்சர்”.

கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் “திமுக நிகழ்ச்சிகளுக்காக பேனர் வைப்பது, வரவேற்பு வளைவுகள் வைப்பது, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதைத் தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதோடு சில நேரங்களில்…

திருச்சியில் (12-09-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 46 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 86 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 581 பேர்…

கடும் கெடுபிடிகளுடன் நீட் தேர்வு திருச்சியில் இன்று நடந்தது.

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெற்றது காலை 11:30 மணி முதல் 1.30 மணி வரை நீட் தேர்வு மையத்திற்குள் மாணவர்கள்அனுமதிக்கப்படுவார்கள் என்றும் 1.30 மணிக்கு மேல் வரும் மாணவர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும்…

தற்போதைய செய்திகள்