Category: திருச்சி

புதிய திட்டங்களுக்கு ஏற்ப புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும் சங்க அமைப்புக் கூட்டத்தில் தீர்மானம்

தமிழ்நாடு வேளாண்மைத்துறை தோட்டக்கலைத்துறையில் பணிபுரியும் உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர், உதவி விதை அலுவலர், துணை வேளாண்மை அலுவலர், துணை தோட்டக்கலை அலுவலர் ஆகியோரின் சங்க அமைப்பு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண்…

டாஸ்மாக் பார் திறப்பதை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் – தலைவர் ஜி.கே வாசன்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் தலைமையில் கட்சி, ஆட்சி குறித்து ஆலோசனை கூட்டம்…

தீபாவளி பண்டிகையையொட்டி சமயபுரம் ஆட்டு சந்தையில் ஆடுகள் விற்பனை படுஜோர்..

திருச்சி மாவட்டம், சமயபுரம் பேரூராட்சி பகுதியில் பிரதி வாரம் சனிக்கிழமை நடைபெறும் ஆடுகள் வாரச் சந்தை தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு நடைபெற்றதால் ஆடுகள் வரத்து அதிகமானதாலும் ,விற்பனையும் படுஜோராக நடைபெற்றது. சமயபுரம் பேரூராட்சிக்கு சொந்தமான 5 ஏக்கர் பரப்பளவில் திருச்சி சென்னை…

பெட்ரோல், டீசல் ,கேஸ் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சைக்கிள் ஊர்வலம்.

பெட்ரோல் விலை லிட்டர் ரூபாய் 105 டீசல் விலை லிட்டர் ரூபாய் 101 சமையல் எரிவாயு விலை ரூபாய் 1000 என்று தினசரி உயர்ந்து வருவது ஒன்றிய அரசின் கலால் வரி விதிப்பு முறைகளே இதற்கு முக்கிய காரணமாகும்.இதன் விளைவாக அனைத்து…

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்தநாள் – காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை.

சுதந்திர போராட்ட தியாகி தெய்வத்திரு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி முன்னிட்டு இன்று காலை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன்…

மத்திய பாஜக அரசை கண்டித்து 19-வது நாளாக காதில் பூவை சுற்றிக்கொண்டு விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்.

 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும், விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை தரக் கோரியும் அதுவரை விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய கோரியும், மழையில் அழிந்து வரும் 40 லட்சம் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல்…

7-வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் – அமைச்சர் கே. என். நேரு தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.

தமிழகத்தில் 7-வது கட்டமாக இன்று கொரோனா தடுப்பூசி மெகா முகாம்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி தில்லைநகர் கி ஆ பெ விசுவநாதம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினைத் நகராட்சி…

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114 பிறந்த நாள் விழா – திருவுருவ சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114 பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவ சிலைக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மத்திய…

ஆவின் வரலாற்றில் முதன் முறையாக நேற்று ஒரே நாளில் ரூ.3 கோடிக்கு ஆவின் பொருட்கள் விற்பனை – அமைச்சர் நாசர் தகவல்.

ஆவின் நிர்வாகத்தின் சார்பில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கான நிலுவையில் உள்ள பணம் வழங்கும் தொடக்க நிகழ்ச்சி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 12 சங்கங்களுக்கு ரூ.81 லட்சம் நிலுவை தொகையினை…

மத்திய அரசை கண்டித்து 18-வது நாள் விவசாயிகள் கண்களை கட்டி உண்ணாவிரத போராட்டம்.

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும், விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை தரக் கோரியும் அதுவரை விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய கோரியும், மழையில் அழிந்து வரும் 40 லட்சம் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல்…

திருச்சியில் ( 29-10-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 40 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 47 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 456 பேர்…

திருச்சியில் 18 புதிய மின்மாற்றிகளை – அமைச்சர் கேஎன்.நேரு இன்று மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்டபட்ட பகுதிகளில் குறைந்த மின்னழுத்தம் மற்றும் கூடுதல் மின் பளுவினை சரிசெய்யும் பொருட்டு , தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் சார்பில் உறையூர் பகுதியில் கீரக்கொல்லை மாதுளங்கொல்லைத் தெரு , நாச்சியார்கோயில் , வெள்ளாளத்தெரு ,…

புகாரை வாபஸ் பெற கூறி மிரட்டுவதாக – போலீஸ் எஸ்.ஐ மீது இளைஞர் பரபரப்பு புகார்

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே கீழவங்காரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நீலாவதி, இதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் எழிலரசிக்கும் நீண்ட காலமாக இடப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் பிரச்சினைக்குறிய இடத்தில் இருந்த கட்டடத்தினை வழக்கறிஞர்…

நீரில் மூழ்கி சகோதரிகள் பரிதாப பலி – சோகத்தில் மூழ்கிய கிராமம்

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே உள்ள திருவளக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த கல்லுடைக்கும் கூலித்தொழிலாளியான சுரேஷ் வயது(30), இவரது மனைவி சுகன்யா வயது (26), இவர்களுக்கு மகாலட்சுமி வயது (6), ஜெயஸ்ரீ வயது (4), என இரண்டு மகள் உள்ளனர். இதனிடையே மூன்று…

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் தீயணைப்பு துறை சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக வெடி வெடிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை, திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், மற்றும் ரோட்டரி கிளப் சார்பில் பொதுமக்கள் வருகிற தீபாவளி பண்டிகையில் பாதுகாப்புடன் வெடி வெடிப்பது குறித்ததான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட…