Category: திருச்சி

திருச்சியில் கோவிட் நலவாழ்வு மையத்தை முதல்வர் திறந்து வைத்தார்.

திருச்சி தூவாக்குடி பகுதியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழக வளாகத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆக்சிஜன் உடன் கூடிய படுக்கைகள் கொண்ட கோவிட் நலவாழ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த 5 பேருக்கு கொரோனா.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று மாலை 21-05-21 திருச்சியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்து பார்வையிடுகிறார். மேலும் மருத்துவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர், அமைச்சர்களுடன் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை…

ராஜீவ் காந்தி சிலைக்கு திருநாவுக்கரசர் எம்.பி மரியாதை.

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தியின் 30வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி ஜங்ஷனில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திருச்சியில் 10000 கடந்த கொரோனா பாதிப்பு.

திருச்சி மாவட்டத்தில் நேற்று வரை கொரோனா நோய் தொற்றால் 9606 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று ஒரு நாள் மட்டும் 1375 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 501 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய உள்ளனர்.…

திருச்சியில் பிரபல திருமண மண்டபம் கொரோனா மையமாக மாற்றம்.

திருச்சி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் நோயாளிகளின் எண்ணிக்கையும் இறப்பின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நோயாளிகளின் சிகிச்சைக்கான இடம் பற்றாக்குறை காரணத்தினால் திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்கும் காவல்துறை, பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நாளை 21-05-21 திருச்சியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்து பார்வையிடுகிறார். மேலும் மருத்துவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர், அமைச்சர்களுடன் கொரோனா சிகிச்சைகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

திருச்சியில் மீன் மார்க்கெட் மூடப்பட்டது.

தமிழகத்தில் கொரோனாவின் நோய் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் ஒருநாளைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டும், உயிர் இழந்தும் வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் மீன் கடை வியாபாரிகளின் குடும்பத்தின் பாதுகாப்பை கருதி.

திருச்சியில் இன்று கொரோனா நிலவரம்

திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் 8552 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று ஒரு நாள் மட்டும் 1459 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 396 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய உள்ளனர்.…

ஊரடங்கில் ஆம்புலன்ஸ்களை அலைக்கழிக்க விடும் காவல்துறை.

கொரோனாவின் இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் நோய்த் தொற்றை கட்டுப் படுத்துவதற்காக தமிழக அரசு 15 நாட்களுக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை மே 10-ம் தேதி முதல் அமல்படுத்தியது. அதிலும் கடந்த 17ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே இ பதிவு…

11 நாட்களுக்கு திருச்சியில் மீன் மார்க்கெட் கிடையாது.

திருச்சி மாவட்ட மொத்த மீன் வியாபார நல சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்.கொரோனாவின் தாக்கம் திருச்சி மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் பொதுமக்கள் மற்றும் நமது உயிர் விலை மதிப்பற்றது ஆகையால் வியாபாரம் ஒன்றே நம் நோக்கமல்ல . நமக்கும்…

மநீம கட்சியில் ஜனநாயகம் அழிந்து சர்வாதிகாரம் தலைத் தூக்கி விட்டது – முருகானந்தம் பேட்டி

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த முருகானந்தம் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், கட்சியில் இணைந்த பொழுது எனக்கான சுதந்திரமும்,ஜனநாயகமும் கொடுக்கப்பட்டதால் என்னால் கட்சியில் முழுவதும் உழைக்க முடிந்தது.ஆனால் கடந்த சில மாதங்களாக கட்சியில் ஜனநாயகம் அற்றுப்போய் விட்டது.…

தகனம் செய்யும் பணியாளர்களுக்கு மரியாதை செய்த எம்எல்ஏ

திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் இன்று ஓயாமாரி சுடுகாடு மற்றும் தகன மேடையை ஆய்வு செய்து பார்வையிட்டார்.மேலும் இந்த கொடிய கொரோனா நோய் தொற்று காலத்தில் இங்கு சிறப்பாக பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கே.என்.நேரு ஆய்வு.

திருச்சி மாநகரப் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்கான முயற்சிகள் திமுக ஆட்சியில் முன்னெடுக்கப்பட்டன . ஆனால் அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலுக்கு முன்பாக…

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்.

பாலஸ்தினயர்களை வெளியேற்றுவதை கண்டித்தும் மஜ்ஜித் அக்ஸாவை அழிக்க முற்படும் இஸ்ரேல் நாட்டை கண்டித்து இந்திய யூனியன்முஸ்லிம் லீக் திருச்சி மாவட்டம் சார்பில் பாலக்கரை ரவுண்டானா அருகே மாநில துணை செயலாளர் பாருக்தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

ஊர் அடங்காதவர்களின் வாகனங்கள் பறிமுதல் போலீசார் அதிரடி.

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த அரசு முனைப்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு , அதிகரித்து வரும் நோய்த் தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு , ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு சில கட்டுப்பாடுகளையும் அரசு விதித்துள்ளது . இருப்பினும் ,…