Latest News

அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் 71-வது பிறந்த நாள் விழா திருச்சி மாநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் நசீமா ஃபாரிக் ஏற்பாட்டில் ஏழை எளிய பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது:- அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் 71-வது பிறந்த நாள் விழா அம்மா பேரவை மாநில துணைச் செயலாளர் ஜோதிவாணன் ஏற்பாட்டில் பார்வையற்றோருக்கு மதிய உணவு வழங்கினர்:- சென்னையில் வருகிற மே 15 ஆம் தேதி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்:- ஜார்ஜியா நாட்டில் நடந்த 15வது சர்வதேச கப் ஆஃப் காஸ்டஸ் 2025 நடன போட்டி – தங்கம் வென்ற திருச்சி வீரர்களுக்கு கலெக்டர் பாராட்டு:- திருச்சி உக்கிர மாகாளி அம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு:-

பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயின் மறுசுழற்சி பயன்பாடு திட்ட துவக்க விழா திருச்சியில் நடந்தது.

திருச்சி மாவட்டம் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயின் மறுசுழற்சி பயன்பாடு திட்ட துவக்க விழா திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டறங்கில் நேற்று நடந்தது.முன்னதாக உணவு பாதுகாப்பு துறை திருச்சி…

காதல் மனைவியை மீட்டுத் தரக்கோரி காவல்நிலையத்தில் வாலிபர் புகார்.

திருச்சி மாவட்டம், புங்கனூர் கிராமம், அருளானந்த உடையார் தெருவைச் சேர்ந்தவர் சந்திரலிங்கம் என்பவரது மகன் சுதாகர் (24). இவர் தனியார் டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த மல்லிகா – தனவேல் என்பவரது மகள் காவியா (19)…

பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த சகோதரர்களால் பரபரப்பு.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சந்தைப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் அர்ஜூனன் வயது 31 இவரது உடன் பிறந்த சகோதரர் கோபால் வயது 25. சகோதரர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளிகளாக வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று…

மத்திய அரசை கண்டித்து SRES-யினர் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்

திருச்சி பொன்மலை கோட்டை பணிமனையில் SRES-யினர் மத்திய அரசின் தொழிலாளர் நல விரோத, தனியார்மய நாசகார கொள்கைகளை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து நேற்று பணிமனையில் போராட்டம் நடத்தினர்.

குண்டர் சட்டத்தில் பிரபல ரவுடி சாமி ரவி கைது

திருச்சி கே. சாத்தனூரை சேர்ந்த கருப்பையா என்பவர் கடந்த 17.06.2021 அன்று டாட்டா ஏசி வண்டியில் உடையான் பட்டி ரயில்வே கேட் பிள்ளையார் கோயில் அருகே சென்றுகொண்டிருந்த போது அவரை வழிமறித்து அவரிடம் இருந்த ரூபாய் 5500/- பணத்தை கத்தியை காட்டி…

திறந்தவெளி பாராக மாறிவரும் திருச்சி மத்திய பஸ் நிலையம். காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?.

திருச்சி மத்திய பஸ் நிலையத்தை சுற்றி அரசு மதுபான கடைகள் அதிகமாக உள்ளது குறிப்பாக தமிழ்நாடு ஹோட்டல் எதிரே அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் பார் இல்லாத காரணத்தால் மது வாங்க வரும் நபர்கள்…

மத்திய அரசின் தனியார்மயக் கொள்கையை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ. ஆர்ப்பாட்டம்.

திருச்சி பொன்மலை ரயில்வே கோட்ட பணிமனை முன்பு இன்று தொழிலாளர்களுக்கு விரோதமாக மத்திய அரசின் தனியார்மயக் கொள்கையை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ. சார்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு துணைப்பொதுச்செயலாளர் வீரசேகரன் தலைமை தாங்கினார்.

இரு தரப்பு பிரச்சனை, மரக்கன்று நட வைத்து சமாதானம்‌ செய்த திருச்சி போலீசார்.

இரு தரப்பினருக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இருத்தரப்பினரையும் கண்டோன்மென்ட் காவல்நிலையம் அழைத்து விசாரணை செய்யப்பட்டது. விசாரணையில் இருத்தரப்பினரும் ஒருமித்தமாக சமாதானமாக செல்வதாகவும் வழக்கு எதுவும் தேவையில்லை என எழுத்துபூர்வமாக தெரிவித்துக்கொண்டனர்.

மகளின் தாலியை அறுத்து எறிந்த தாய், திருச்சி காவல் நிலையத்தில் பரபரப்பு.

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் கொல்லான்குளம் நாயக்கர் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் இவரது மனைவி ஜோதி இவர்களின் மகன் மணிகண்டன் வயது (23). இந்த பகுதியில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இதேபோல் எடமலைப்பட்டிபுதூர் நல்லகேணி தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் இவரது மனைவி தனலட்சுமி இவர்களின்…

திருச்சியில் (07-07-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 142 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 105 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 1520 பேர்…

பாலியல் புகார், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் கைது.

திருச்சியில் பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியரும் தமிழ்த்துறை தலைவருமான பால் சந்திரமோகன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல்லூரியில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவிகள் தமிழ் துறை தலைவர் மீது புகார் தெரிவித்து…

தாயின் கனவை நிறைவேற்றிய, திருச்சி தடகள வீராங்கனை தனலெட்சுமி.

திருச்சி மாவட்டம் குண்டூர் பகுதியை சேர்ந்த சேகர்-உஷா தம்பதியரின் மகள் தனலெட்சுமி (வயது 22) சிறு வயதில் தந்தையை இழந்த தனலெட்சுமி தனது தாயின்அறவனைப்பில் வளர்ந்து வந்தவர். பல தடைகளை கடந்து இச்சாதனைகளை புரிந்திருக்கிறார். மேலும் தனது தாயின் கனவான ஒலிம்பிக்கில்…

இரங்கல் கூட்டத்தில் பாதிரியார் மற்றும் பங்கு மக்களை காக்க வைத்த திருச்சி எம்எல்ஏ.

மறைந்த அருட்தந்தை ஸ்டென்‌ சுவாமி அவர்களின் இரங்கல் கூட்டம் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் சார்பாக திருச்சி மேலப்புதூர் நல்லாயன் நிலையத்தில் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் மாநிலத் தலைவரும், திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான இனிகோ இருதயராஜ் ‌ தலைமையில் இன்று மாலை…

திருச்சியில் (06-07-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 146 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 102 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 1486 பேர்…

இணையவழி குற்றவாளிகள் குறித்து திருச்சி மாநகர போலீஸ் எச்சரிக்கை.

திருச்சி மாநகர காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில். முகநூல் பக்கத்தில் நடுத்தர வயதுடையோர், தொழில்முனைவோர் மற்றும் இளைஞர்களை குறிவைத்து இணையவழி குற்றவாளிகள் செயல்படுகிறார்கள். உங்களது முகநூல் பக்கத்தில் வெளிநாட்டவர் அல்லது வெளிநாட்டில் வாழும் இந்தியர் போல் நண்பராகி, பின்பு அந்த நபர்…

தற்போதைய செய்திகள்