இன்று கூட உள்ள சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஒன்றிய அரசு தொகுதி மறு வரையறை மசோதாவை கொண்டு வர உள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளும் வகையில் அந்த மசோதா உள்ளது. இது நிறைவேற்றப்பட்டால் மக்கள் தொகையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் பாதிக்கப்படும்  வடமாநிலத்தை விட தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் குறையும் என்று கூறி தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஒன்றிய பாஜக அரசு கொண்டுவரவுள்ள தொகுதி மறு வரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் கருப்பு கொடி ஏற்றி தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். அதன் அடிப்படையில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சரும் திமுகவின் முதன்மை செயலாளருமான கே என் நேரு தலைமையில் திமுகவினர். திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதிகளில் இரண்டு இடங்களில் கருப்புக் கொடி ஏற்றியும் மசோதா நகலை எரித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே என் நேரு, தொகுதி மறு வரையறை என்கிற பெயரில் தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க பார்க்கிறார்கள். ஒன்றிய அரசின் அறிவுறுத்தலின்படி குடும்ப கட்டுப்பாட்டை சரியாக கடைப்பிடித்ததால் தான் தமிழ்நாடு மக்கள் தொகையை கட்டுப்படுத்தியது ஆனால் அதை. வைத்து இன்று தமிழ்நாடு பாதிக்கக் கூடிய வகையில் தொகுதி மறுவரையறையை செய்கிறார்கள். இதை கண்டித்து தான் இன்று கருப்புக் கொடி ஏற்றி உள்ளோம். அதிமுக ஏற்கனவே குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்தார்கள், வேளாண் சட்டத்தை ஆதரித்தார்கள் அவர்கள் ஆதரிக்க வில்லை என்றால் அந்த சட்டங்கள் நடைமுறைக்கு வந்திருக்காது தற்பொழுது தொகுதி மறு வரையறை புதிய சட்டத்தையும் ஆதரிக்கிறார்கள் இதனால்தான் அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்து விட்டார்கள் எனக் கூறுகிறோம். அதற்கு எடப்பாடி பழனிச்சாமி கோபித்துக் கொள்கிறார் என்றார். முன்னதாக அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரம் மேற்கொண்டபோது கருப்பு சட்டை அணிந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்