108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அன்போடு அழைக்கப்படுவது ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ஆகும்.. இந்த கோவிலுக்கு திருச்சி மட்டுமில்லாமல் வெளி மாநிலம் மற்றும் பல்வேறு வெளி நாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம் திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், ஸ்ரீரங்கம் “அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரைத் தேர்த் திருவிழாவினை முன்னிட்டு வருகின்ற 06.05.2024 திங்கட்கிழமையன்று உள்ளுர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

இந்த தேர்த் திருவிழாவினை முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். எனினும் பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது. மேற்கண்ட விடுமுறை நாளில் மாவட்டத்தில் அரசு பாதுகாப்பு தொடர்பான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள், கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இந்த உள்ளுர் விடுமுறையானது 2024 பாராளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் அலுவலர்கள் பணியாளர்களுக்கு பொருந்தாது. இந்த விடுமுறைக்குப் பதிலாக வருகின்ற 29.06.2024 சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *