இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகி, கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பர பிள்ளை அவர்களின் 155 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கோர்ட் எதிரே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர்கள் கவுன்சிலர் ரெக்ஸ் , தொட்டியம் சரவணன், ராஜலிங்கம் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அருகில் மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் முகம்மத முகையத்தீன், தமிழ்நாடு வேதாரணியம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில தலைவர் பூக்கடை பன்னீர்செல்வம், மாவட்ட பொருளாளர் நல்ல சேகர், கோட்டத் தலைவர் பிரியங்கா பட்டேல் ஐ. டி.பிரிவு அரிசி கடை டேவிட், மனித உரிமைத் துறை மாவட்ட தலைவர் ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.
