திருச்சி கலெக்டர் ரோடு ராஜா காலனி பகுதியில் தமிழ்நாட்டின் பாரம்பரிய மிக்க தஞ்சாவூர் பலகை ஓவியங்களின் விற்பனை நிலையமான மாயன் ஆர்ட்ஸ் அண்ட் ஸ்டுடியோ திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த கலாச்சார ஓவியம் விற்பனை நிலையத்தில் இந்தியாவில் உள்ள தமிழ்நாடு கேரளா குஜராத் மத்திய பிரதேசம் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் பாரம்பரியமிக்க கலாச்சாரங்களை பெருமைப்படுத்தும் விதமாக ஓவியங்களாக வரையப்பட்டு தற்போது மாயன் ஆர்ட்ஸ் அண்ட் ஸ்டுடியோவில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க கலாச்சாரத்தை மக்களிடையே கொண்டு செல்வதற்காக தஞ்சாவூர் பலகை ஓவியங்கள் மற்றும் தேசிய அளவிலான ஆப்பிரிக்கன் பெயிண்டிங் ரெசின் ஆர்ட் ஓவியங்களும் தற்போது விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

பாரம்பரியமிக்க தஞ்சாவூர் பலகை ஓவியம் குறித்து மாயன் ஆர்ட்ஸ் அண்ட் ஸ்டூடியோவின் உரிமையாளர் பிரியங்கா பட்டேல் கூறுகையில்:-

தமிழ்நாட்டின் பாரம்பரிய கலையான தஞ்சாவூர் பலகை ஓவியம் இந்திய அளவில் உள்ள மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் திருச்சியில் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு ஓவியம் வரைய கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும் 10 வயது முதல் 70 வயது வரை உள்ள குழந்தைகள் பெண்கள் முதியோர் என பல தரப்பட்டவர்களுக்கு இந்த கலாச்சார ஓவியம் கற்றுக் கொடுக்கப் பட்டுள்ளது.

மேலும் இதன் மூலம் தங்கள் வீட்டை அலங்கரித்துக் கொள்ளவும் அதனை வரைந்து விற்பனை செய்யவும் நாங்கள் ஏற்பாடு செய்து தருகிறோம். இதன் மூலம் வீட்டில் இருக்கும் பெண்கள் தங்கள் வாழ்வில் முன்னேற வழிவகை செய்து தருகிறோம் மேலும் இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களின் கலாச்சாரங்களை ஓவியங்களாக வரைந்து மக்களிடையே கொண்டு சேர்ப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *