திருச்சியில் அரசு மருத்துவமனை, கலையரங்கம் திருமண மண்டபம் மற்றும் தேசிய தொழில்நுட்பக் கழக வளாகத்தில் கொரோனா சிகிச்சைப் பிரிவு மையங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்து ஆய்வு செய்தார்.

நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்.

மு.க.ஸ்டாலின் ஆகிய என்மேல் நம்பிக்கை வைத்து என்னை வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி. நடந்து முடிந்த தேர்தலில் நான் வெற்றி பெற்றதையடுத்து எனக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த அதிகாரிகளிடம் கொரோனா தடுப்பு குறித்தே விவாதித்தேன். மேலும் கொரோனா தடுப்பு தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதன் மூலம் கொரோனா சிகிச்சைகான தகவல்களை பெற வார் ரூம் அமைக்கப்பட்டது. மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதால் தமிழகத்துக்கு கூடுதல் ஆக்சிஜன் கிடைத்தது. தமிழகத்தில் 2.7 கோடி ரேஷன் கார்டு தாரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. மறைந்த கலைஞர் பிறந்த நாளுக்கு முன்பாக கொரோனா நிவாரணத்தின் 2ம் தவணை ரூ.2ஆயிரம் வழங்கப்படும். கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள அனைத்து கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னையை போன்று பிற மாவட்டங்களில் வார் ரூம் அமைக்க யோசித்து வருகிறோம். தடுப்பூசி, ஆக்சிஜன் ஆகியவற்றை தமிழகத்திலேயே தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை நீடிப்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்படும். ஊரடங்கு மூலம் தொற்று பரவும் வேகத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா இல்லை என்று சொல்லும் நாளே நமக்கு மகிழ்ச்சியான நாள். மேலும் நாளை அனைத்து கட்சி அரசியல் தலைவர்கள் மற்றும் மருத்துவர்கள், அரசு அதிகாரிகளுடன் கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தலாமா? அல்லது மேலும் கூடுதலாக கட்டுப்பாடுகளை விதிக்கலாமா என்பது குறித்து ஆலோசனை மேற்கு மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *