தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளரும், தமிழக ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான ஆனந்த் அவர்களின் 63வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் உள்ள தவெகவினர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் அன்னதானம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் உள்ளிட்டவைகளை வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் அமைச்சர் ஆனந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகர தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள விடிவெள்ளி சிறப்பு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு மதிய உணவை திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயர் சீனிவாசன் தலைமையில் தமிழக வெற்றி கழகத்தின் பொறுப்பாளர் தர்கா சௌகத், நிர்வாகிகள் நடிகர் ஜெரால்ட், கௌதம், ஜிம் மாஸ்டர் அருண்குமார், வெங்கட் பிரபு, ரோஜர் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்