தமிழக வெற்றி கழக தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜய் பிறந்தநாள் விழா மற்றும் தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆனந்த் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானங்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டுப் போட்டிகளை தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக திருச்சி மன்னார் புரம் அருகே உள்ள விழியிழந்த மகளிர் மறு வாழ்வு மையத்தில் திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயர் சீனிவாசன் மற்றும் தமிழக வெற்றி கழக பொறுப்பாளர் சௌகத் ஆகியோர் விழி இழந்த மகளிருக்கு மதிய உணவை வழங்கினர். முன்னதாக தமிழக முதல்வர் ஜோசப் விஜய், அமைச்சர் ஆனந்த் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் வழக்கறிஞர் சசிகுமார், ரோஜர் , வெங்கட்பிரபு, கௌதமன், பாலக்கரை சிவா உள்ளிட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்