திருச்சி எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியின் 24வது ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு எம்.ஐ.இ.டி. கல்வி நிறுவனங்களின் தலைவர் அல்ஹாஜ் முகமது யூனுஸ் தலைமை வகித்து தலைமை உரையாற்றினார். மேலும் எம்.ஐ.இ.டி கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் முனைவர் அப்துல் ஜலீல் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஜவர்களால் நேரு தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் மற்றும் பேராசிரியர் முனைவர் சுதர்சன ராவ் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி, 275 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி மாணவர்களிடையே பட்டமளிப்பு விழா உரையாற்றினார்.

சிறப்புரையில் அவர் பேசியதாவது:- பட்டமளிப்பு விழா என்பது முடிவல்ல மாணவர்களாகிய உங்களுடைய வளர்ச்சியின் ஆரம்பம் என்றார். மாணவர்கள் புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு தன்னை தயார்படுத்துக் கொள்ள வேண்டும். கடினமாக உழைக்க வேண்டும். தான் செய்யும் வேளையில் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் எங்கு சென்றாலும் தான் வந்த பாதையை மறக்க கூடாது. குறிப்பாக தான் கல்விகற்ற நிறுவனம் மற்றும் தன் பெற்றோர்கள் உறவினர்கள் அவைவரையும் ஒருபோதும் மறக்க கூடாது. மேலும் மாணவர்கள் தங்களின் நெறிமுறைகளையும் பாரம்பரியத்தையும் எங்கே சென்றாலும் பின்பற்ற வேண்டும். ஏனென்றால் நீங்களே நாளைய தலைவர்கள் மற்றும் நாளைய உலகில் என்ன விட்டுவிட்டு செல்ல போகிறார்கள் என்று இந்த உலகம் உற்றுப்பார்த்துக் கொண்டு இருக்கும்.

முன்னதாக இந்த வருடத்திற்கான நீதிபதி பக்கீர் முகமது சுழல் கோப்பையானது பல்கலைக்கழக தேர்வில் முதலிடம் பிடித்த கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைக்கு வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கு வருகை தந்த மாணவர்கள், பெற்றோர்கள் சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் நவீன்சேட் வரவேற்று கல்லூரி கடந்து வந்தபாதை, அதன்வளர்ச்சி மற்றும் சாதனைகளை தன்னுடைய பட்டமளிப்பு விழா அறிக்கையில் எடுத்துக்கூறினார்.

தசரதிஷோகி செயற்கை நுண்ணறிவியல் துறைத்தலைவர் சிறப்பு விருந்தினர் அவர்களை அறிமுகப்படுத்தினார். இறுதியாக மேலாண்மைத்துறை துறைத்தலைவர் முனைவர் ஆண்டனி பிரகாஷ் நன்றி உரையாற்றினார். இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழாவின் ஒருங்கிணைப்பாளரான அறிவியல் மற்றும் மனிதநேயத் துறையின் துறைத்தலைவர் மணிகண்டன் செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்